வீதியில் செல்லும் ஆண்­களை அழைத்­து­வந்து அவர்­க­ளுடன் உறவு கொள்ள மனை­வியை நிர்ப்­பந்­தித்த நபர்; மினுவாங்கொடை பொலிஸாரால் கைது

(எஸ்.கே. ரெ. கிறிஷ்­ணகாந்)

வீதியில் சந்­திக்கும் ஆண்­களை வீட்­டுக்கு அழைத்து வந்து தமக்கு முன்னால் அவர்­க­ளுடன் கணவன், மனை­வி­யாக நடந்து கொள்­ளும்­படி கட்­டா­யப்­ப­டுத்தி மனை­வியைத் தாக்கும் கணவர் ஒரு­வரை மினு­வாங்­கொட பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்­ந­பரை மினு­வாங்­கொட நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போது நீதவான் சியனி சத்­து­ரங்கி பெரேரா சந்­தேக நபரை எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்டார்.

நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சாலை மன­நல வைத்­தி­ய­ரிடம் சந்­தேக நபரை ஆஜர்­செய்து 14 ஆம் திகதி அறிக்கை ஒன்றை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கும்­ப­டியும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.

முறைப்­பாட்­டாளர் 57 வய­தான மூன்று பிள்­ளை­களின் தாயெ­னவும், சந்­தேக நபர் 61 வய­தான ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீர­ரெ­னவும் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தேக நபரின் இந்த நட­வ­டிக்­கையால் இனந்­தெ­ரி­யாத பல ஆண்­க­ளுடன் கணவன் மனை­வி­யாக நடந்து கொண்­டுள்­ள­தா­கவும் திரு­ம­ண­மான தமது பிள்­ளை­க­ளுக்கு இது குறித்து எதுவும் தெரி­யா­தெ­னவும் அப்பெண் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

கணவன் இனந்­தெ­ரி­யாத ஆண்­களை வீட்­டுக்கு அழைத்து வரும்­போது அச்சம் கார­ண­மாக வீட்­டை­விட்டு வெளி­யேறி மறைந்திருக்க முயற்சித்தாலும் கணவர் தேடிப்பிடித்து அந்த நபர்களுடன் கணவன் மனைவியாக நடந்துகொள்ளச் செய்வதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

(Visited 467 times, 1 visits today)

Post Author: metro