போதைப் பொருள் விற்­ப­னை­யுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் தங்­கொட்­டு­வயில் 4 இளை­ஞர்கள் கைது

(மது­ரங்­குளி நிருபர்)

தங்­கொட்­டுவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சிங்­க­குளி எனும் பிர­தே­சத்தில் ஹெரோயின் விற்­ப­னையில் ஈடு­பட்டு வந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு இளை­ஞர்­களை ஹெரோ­யி­னுடன் கைது செய்­துள்­ள­தாக தங்­கொட்­டுவ பொலிஸார் தெரி­வித்­தனர். தங்­கொட்­டுவ சத­லங்கா எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயது வரை­யி­லான இளை­ஞர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தகவல் ஒன்­றை­ய­டுத்து நேற்று முன்­தினம் குறித்த வீட்டை தங்­கொட்­டுவ பொலிஸார் சோத­னைக்கு உட்­ப­டுத்தி அங்­கி­ருந்த நான்கு இளை­ஞர்­களைக் கைது செய்து விசா­ரணை செய்த போது அவர்­களால் விற்­பனை செய்­வ­தற்­காக கொண்டு வரப்­பட்­டி­ருந்த ஒரு தொகை ஹெரோ­யினைக் கைப்­பற்­றி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் சில கால­மாக சத­லங்கா பிர­தே­சத்­தி­லி­ருந்து சிங்­க­குளி பிர­தேச வீட்­டுக்கு ஹெரோ­யினைக் கொண்டு வந்து அங்­கி­ருந்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்து வந்­தி­ருப்­ப­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­தி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த தங் கொட்டுவ பொலிஸார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Post Author: metro