800 மீற்றர் வீதி கொங்­கி­றீட்டை ஒரே இரவில் திரு­டிய நபர்

தெருக்­கொள்ளை என்­ப­தற்கு சீனாவைச் சேர்ந்த ஒருவர் நவீன அர்த்தம் கற்­பித்­துள்ளார். 800 மீற்றர் (சுமார் அரை மைல்) நீள­மான “கொங்­கிறீட் பாதையை” இந்­நபர் ஒரே இரவில் திரு­டி­யுள்ளார்.

சீனாவின் ஜியாங்சு மாகா­ணத்தின் சான்­கேசு எனும் கிரா­மத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.  மேற்­படி வீதியில் போடப்­பட்­டி­ருந்த கொங்­கி­றீட்டில் சுமார் 800 மீற்றர் நீள­மான பகுதி முற்­றாக அகற்­றப்­பட்­டி­ருந்­ததைக் கண்டு உள்ளூர் மக்கள் வியப்­ப­டைந்­தனர்.

வீதியை மேலும் நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்­காக அதி­கா­ரி­களால் இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என அவர்கள் முதலில் எண்­ணினர்.
ஆனால், அவ்­வீ­தி­யி­லி­ருந்த கொங்­கிறீட் முற்­றாக திரு­டப்­பட்­டுள்­ளது என்­பதை அறிந்து அவர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

ஸு எனும் நபர், அகழ்வு இயந்­தி­ரங்­க­ளையும் வாக­னங்­க­ளையும் பயன்­ப­டுத்தி, மேற்­படி கொங்­கி­றீட்டை அகழ்ந்து கற்கள் தயா­ரிக்கும் தொழிற்­சா­லை­யொன்­றுக்கு விற்­பனை செய்­துள்ளார் என பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இவர் மேற்­படி கொங்­கிறீட் பாகங்­களை 5000 சீன யுவான்­க­ளுக்கு (சுமார் 123,000 ரூபா) விற்­பனை செய்தார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
சந்­தேக நப­ரான ஸுஇது தொடர்­பாக கூறு­கையில், அருகில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மற்­றொரு வீதியால் இவ்­வீதி பய­னற்றுப் போய்­விட்­டது. இதை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால், அதிலிருந்த சீமெந்தை நான் விற்பனை செய்து பணமாக்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro