இறு­திக்­கி­ரியை நடத்­து­ப­வ­ராக பணி­யாற்றும் 17 வயது சிறுமி

பிரிட்­டனைச் சேர்ந்த 17 வய­தான ஒரு சிறுமி உயி­ரிந்­த­வர்­க­ளுக்கு இறுதிக் கிரியை நடத்­து­ப­வ­ராக பணி­யாற்­று­கிறார். எல்லீ எனும் இச்­சி­றுமி இது தொடர்­பாக கூறு­கையில், “சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனக்கு நெருக்­க­மான குடும்ப அங்­கத்­தவர் ஒருவர் இறந்தார்.

நான் தான் அவரின் சட­லத்தை முதலில் கண்டேன். அதன்பின் சட­லங்­களின் பின்­னா­லுள்ள விஞ்­ஞானம் குறித்து ஆராயும் ஆர்வம் எனக்கு ஏற்­பட்­டது” எனத் தெரி­வித்­துள்ளார்.

“அவரின் இறு­திக்­கி­ரி­யைக்குப் பின்னர், நோட்­டிங்­ஹாம்­ஷ­ய­ரி­லுள்ள மலர்ச் ­சாலையில் சில வேலை­களைச் செய்து அனு­பவம் பெற்றேன். எனக்கு அங்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டது. மரணம் குறித்து அறி­விக்­கும் குடும்ப அங்­கத்­த­வர்­களின் தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்கு பதி­ல­ளிப்­பது மற்றும் சட­லங்­க­ளுக்கு அலங்­காரம் செய்­வது போன்­ற­வற்றில் நான் ஈடு­பட்டேன்.

இப்­பணி குறித்து எனது நண்­பர்­க­ளி­ட­மி­ருந்து கல­வை­யான பிர­தி­ப­லிப்­புகள் கிடைத்­தன. அவர்­களில் பலர் இது குறித்து பேச விரும்­ப­வில்லை. ஒரு­வரின் நேசத்­துக்­கு­ரி­யவர் இறந்து ­விட்டால், இறந்­த­வ­ருக்கு உரிய மரியாதை கொடுத்து உரிய பணிகளை மேற்கொள்வதை கௌரவமாகக் கருதுகிறேன்” எனவும் எல்லீ தெரிவித்துள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro