9 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(ரெ.கிறிஷ்ணகாந், இரோஷா வேலு)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் கார­ண­மாக நாட்டில் உள்ள அனைத்து பாட­சா­லை­களும் 9 ஆம் திகதி முற்­றாக மூடப்­ப­ட­வுள்­ளன.
அவற்­றுடன் பிர­தான 19 பாட­சா­லைகள் உள்­ளிட்ட 2 கல்­லூ­ரி­களும் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இன்று முதல் மூன்று நாட்­க­ளுக்கு மூடப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

உள்­ளூ­ராட்­சி ­மன்றத் தேர்தல் எதிர்­வரும் 10 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருப்­பதால் வாக்­குச்­சா­வ­டி­களை ஆயத்தம் செய்யும் நட­வ­டிக்­கைகள் இன்று முதல் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

பிர­தான 19 பாட­சா­லைகள் உள்­ளிட்ட 2 கல்­லூ­ரி­க­ளுக்கு இன்று முதல் மூன்று நாட்­க­ளுக்கு விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது.
அவற்­றுடன் நாட்டின் அனைத்து பாட­சா­லை­களும் எதிர்­வரும் 9 ஆம் திகதி முற்­றாக மூடப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லேயே வாக்கு என்னும் பணிகள் இடம்­பெ­று­வ­தாலும் பாட­சா­லை­களின் உடைமை­க­ளுக்கு எது­வித ஆபத்தும் ஏற்­ப­டா­வண்ணம் பாது­காப்­பான முறையில் தேர்தல் நட­வ­டிக்­கைகள் பாட­சா­லை­களில் இடம்­பெ­றவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், தேர்தல் நடி­வ­டிக்­கை­க­ளுக்­காக மூடப்­படும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் வழமைபோல் இயங்கும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

(Visited 34 times, 1 visits today)

Post Author: metro