மக்கள் வங்கியின் சுய வங்கி சேவை யாழ்ப்பாணத்தில்…

மக்கள் வங்­கியின் புதிய சுய வங்கி சேவை (self banking) மக்கள் வங்­கியின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி, பொது முகா­மை­யாளர் என். வசந்­த­கு­மா­ரினால் யாழ்ப்­பாணம் ஸ்டென்லி வீதியில் அமைந்­துள்ள மக்கள் வங்கி கிளையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

peoples-bank-jaffna

 

மக்கள் வங்­கியின் Digital banking வேலை­திட்­டத்தின் பகு­தி­யாக, யாழ்ப்­பா­ணத்­திலும் சுய வங்கி சேவை தொகுதி தன்­னி­யக்க இயந்­திரம் (ஏ.ரி.எம்), பண­வைப்பு இயந்­திரம் (CDM), பற்­று­சீட்டு கட்­ட­ணங்கள் இயந்­திரம் (kisok) ஆகி­ய­வையின் சேவை­யா­னது ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இதன் மூலம் 24 மணி­நேரம், வருடம் முழு­வ­து­மான வங்­கிச்­சே­வையை தடை­யின்றி மக்கள் வங்­கியின் வாடிக்­கை­யா­ள­ருக்கும் மற்றும் வாடிக்­கை­யாளர் அல்­லா­த­வர்­க­ளுக்கும் பெற­மு­டியும். இந்த சுய வங்கி சேவையில், தன்­னி­யக்க இயந்­திரம் (ஏ.ரி.எம்.) மூல­மாக பணத்தை மீளப்­பெ­றுதல், பண­மீதி நிலு­வையை பரீட்­சித்தல், வங்கி அட்­டையின் இரக­சிய எண்ணை மாற்­றுதல் போன்ற சேவை­களை பெற­மு­டியும்.

பண­வைப்பு இயந்­திரம் (CDM) மூல­மாக பண­வைப்பு (வங்­கி­அட்­டை­மூலம் அல்­லாது), பணம் மூலம் பற்­றுச் ­சீட்டு கட்­ட­ணங்கள் மற்றும் பண­மீதி நிலுவை பரீட்­சித்தல். இதே­போன்று kiosk இயந்­தி­ரத்­தினால், மக்கள் வங்­கியின் வீசா­ அட்­டையின் மூல­மாக பற்­று­ச்சீட்டு கட்­ட­ணங்­க­ளான டயலொக் (தொலை­பேசி, தொலைக்­காட்சி) கட்­ட­ணங்கள், மொபிட்டல் கட்­ட­ணங்கள், SLT கட்­ட­ணங்கள், LANKABELL கட்­ட­ணங்கள், (CEB/LECO) கட்­ட­ணங்கள், நீர் கட்­ட­ணங்கள் செலுத்த முடியும். மேல­தி­க­மாக வங்கி அட்­டையின் இரக­சிய இலக்­கத்தை மாற்றி கொள்­ளவும் முடியும்.

இந்த சுய வங்கி சேவை ஆரம்ப விழாவில் மக்கள் வங்­கியின் பிரதி பொது முகா­மை­யாளர் கே.பீ. ராஜ பக் ஷ, பிரதி பொது முகா­மை­யாளர் (கிளை­மு­கா­மைத்­துவம் மற்றும் இலத்­தி­ர­னியல்) பொனிபெஸ் சில்வா, பிரதி பொது முகா­மை­யாளர் (வங்கி உதவி சேவை) மகிந்த பிரேம்நாத், பிரதி பொது முகா­மை­யாளர் (தனி­ந­பர்­களை மையப்­ப­டுத்­திய வங்கி அலு­வல்கள்) லயனல் கலகெதர, யாழ்ப்பாணம் பிராந்திய முகாமையாளர் மு. சுசேந்திரன், மக்கள் வங்கி சேவையாளர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

(Visited 256 times, 1 visits today)

Post Author: metro