வெளி­வி­வ­கார அமைச்­சினால் இடைநிறுத்தப்பட்ட இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ரா­லய பாது­காப்பு ஆலோ­ச­கரை மீண்டும் பத­வியில் அமர்த்­து­மாறு ஜனா­தி­பதி உத்­த­ரவு!

(ரெ.கிறிஷ்­ணகாந், இரோஷா வேலு)

பிரித்­தா­னி­யா­வி­லுள்ள இலங்கை உயர் ஸ்­தா­னி­க­ரா­லா­யத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றிய நிலையில் அப்­ப­த­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட பிரி­கே­டியர் பிரி­யங்­கர பெர்­னாண்­டோவை உடன் அமு­லுக்கு வரும்­வ­கையில் மீண்டும் பத­வியில் அமர்த்­து­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாக இரா­ணுவப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி இலங்­கையில் நடை­பெற்ற 70 ஆவது சுதந்­திர தினக்கொண்டாட்­டங்­க­ளுக்கு எதி­ராக லண்­ட­னி­லுள்ள இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­துக்கு முன்­பாக தமி­ழர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

அச்­சந்­தர்ப்­பத்தில் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­தி­லுள்ள இலங்கை பிர­தி­நி­திகள் சிலர் காரி­யா­ல­யத்­தி­லி­ருந்து வெளியில் வந்­தனர். அவர்­க­ளுடன் வெளி­யில்­வந்த பிரி­கே­டியர் பிரி­யங்­கர, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நோக்கி கழுத்தை வெட்­டு­வது போல தனது விரல்­களை கழுத்தில் வைத்து சைகை காட்­டு­வது போன்ற காணொளி ஒன்று அண்­மையில் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

மேலும் இச்­சம்­பவம் தொடர்­பாக பலர் கண்­ட­னங்­களை வெளி­யிட்டு வரும்­நி­லையில், லண்டன் வெளி­வி­வ­கார அமைச்சர் போரிஸ் ஜோன்ஸன், “இந்த நாட்டின் ஒரு விருந்­தா­ளி­யா­கவும், அரச அதி­கா­ரத்திலும் பணி­யாற்றும் ஒருவர், இவ்­வா­றான காலத்­திற்குப் பொருத்­த­மற்ற, ஏற்­றுக்­கொள்ள முடி­யாத மற்றும் அச்­சு­றுத்­து­வது போன்ற நடத்­தையில் ஈடு­பட்­டுள்­ள­மையை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

எனவே, பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரச் செயலர் மற்றும் பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரச் செய­லகம், இந்த விட­யத்தில் இலங்கை உயர்ஸ்­தா­னிகர் உட­ன­டி­யாகத் தலை­யிட்டு பிரி­கே­டியர் பிரி­யங்­கர பெர்­னாண்­டோவின் இரா­ஜ­தந்­திர ஆவ­ணங்­களை விலக்கிக் கொண்டு அவரை நாட்டை விட்டு வெளி­யேற்ற வேண்டும் என்றும் கூறி­யி­ருந்­தன.

.இந்­நி­லையில், குறித்த காணொளி தொடர்பில் கவனம் செலுத்­தி­யி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சு, நேற்­று­முன்­தினம் லண்­ட­னி­லுள்ள இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­துக்கு பிரி­கே­டியர் பிரி­யங்­க­ரவை பத­வி­யி­லி­ருந்து உடன் அமு­லுக்கு வரும் வகையில் இடை­நி­றுத்­து­மாறு அறி­வித்­தலை அனுப்­பி­யி­ருந்­தது.

இந்த அறி­வித்­த­லை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக பதவி உள்­ளிட்ட அனைத்து பொறுப்­பு­க­ளி­லி­ருந்தும் இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்டு அவ­ருக்கு எதி­ராக இரா­ணு­வத்­தி­னரால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக இரா­ணுவப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

இதே­வேளை, பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்ட பத­வியை அவ­ருக்கு மீள வழங்­கு­வது தொடர்பில் இரா­ணு­வத்­த­ள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யுடன் நேற்று கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­டயம் குறித்து கவனம் செலுத்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அதி­கா­ரிக்கு எதிராக குறித்த காணொ­ளியை மாத்­திரம் ஆதா­ர­மாக வைத்து பக்­கச்­சார்­பான நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்­பதால் அவரை தனது பணி­களை மீண்டும் தொடர அனு­ம­திக்கும் வகையில் ஜனா­தி­ப­தியின் விசேட தலை­யீட்டின் கீழ் பிரி­கே­டியர் பிரி­யங்­க­ர­வி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியில் மீண்டும் அவரை நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­பதி, வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு உத்­த­ர­விட்­ட­தாக இரா­ணுவப் பேச்­சாளர் சுமித் அத்­த­பத்து தெரி­வித்­துள்ளார்.

அதற்­க­மைய நேற்­று­முன்­தினம் வெளி­வி­வ­கார அமைச்­சினால் பிரித்­தா­னி­யா­வி­லுள்ள இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­துக்கு அனுப்­பப்­பட்ட அறி­வித்தல் தடை செய்­யப்ப ட்டதுடன், பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.

அத்துடன் இது தொடர்பில் இலங்­கை­யி­லுள்ள உயர்­மட்ட அதி­கா­ரிகள் தீவி­ர­மான அவ­தா­னத்­தினை செலுத்­தி­யுள்­ள­தா­கவும் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கை­யிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும், அவர் மீளப் பத­விக்கு அமர்த்­தப்­பட்­ட­போ­திலும், இலங்கை இரா­ணு­வத்­தி­னரால், அவ­ருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(Visited 146 times, 1 visits today)

Post Author: metro