Nokia 3310 தொலைபேசி 12 வருடங்களின் பின் புதுமெருகுடன் மீள அறிமுகம்

Nokia நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற Nokia 3310  செல்லிடத் தொலைபேசி புதுமெருகுடன் மீண்டும் அறிமுகமாகியுள்ளது.

உலகின் மிகப் பெரிய செல்லிடத் தொலைபேசி கண்காட்சியான வேர்ல்ட் மொபைல் கொங்கிரஸ் ஸ்பெய்னின் பார்சிலோனா நகரில் நடைபெறும் நிலையில், பார்ஸிலோனா நகரில் நேற்றுமுன்தினம் புதிய நோக்கியா 3310 தொலைபேசியை எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

 

nokia-3310-new-phone

புதிய Nokia 3310



பின்லாந்து நிறுவனமான நோக்கியாவினால் 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 3310 தொலைபேசி பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 12.6 கோடி Nokia 3310 தொலைபேசிகள் விற்பனையாகின. ஆனால், ஸ்மார்ட்போன்களின் வருகையுடன் Nokia நிறுவனம் வீழ்ச்சியடைந்தது. 2005 ஆம் ஆண்டு நோக்கியா 3310 தொலைபேசி தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

 

nokia-3310-old


பழைய Nokia 3310



அதன்பின் சுமார் 12 வருடங்கள் கடந்த நிலையில், புதுமெருகேற் றப்பட்ட Nokia 3310 தொலைபேசி நேற்று முன்தினம் அறிமுகப் படுத்தப் பட்டது. Nokia தொலைபேசிகளைத் தயாரிக்கும் உரிமையை மற்றொரு பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை Nokia ஸ்மார்ட்போன்களான Nokia 3, Nokia 5, Nokia 6 தொலைபேசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 புதிய Nokia 3310 தொலைபேசி யானது. 2.5G இணைப்புவசதி கொண்ட இத்தொலைபேசி பின்புற கெமராவையும் கொண்டுள்ளது.

6 சென்ரிமீற்றர் வர்ணத் திரை கொண்ட இத் தொலைபேசியின் எடை 79.6 கிராம் ஆகும். சிவப்பு, மஞ்சள், கறுப்பு முதலான வர்ணங்களில் இத் தொலைபேசிகள் கிடைக்கின்றன.

 

nokia-3310-nokia-5-nokia-6


Nokia 3310 தொலைபேசியின் பற்றரி talk time 22 மணித்தியாலங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்ட்பை நிலையில் ஒரு மாத காலம் சார்ஜ் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இதன் விலை 49 யூரோ (சுமார் 8,000 இலங்கை ரூபா சுமார் 3,500 இந்திய ரூபா) ஆகும்.

(Visited 447 times, 3 visits today)

Post Author: metro