காங்­கே­சன்­துறை கடற்­க­ரையில் காணப்­பட்ட பட­கி­லி­ருந்து 2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்கம் மீட்பு: இருவர் கைது!

(பாறுக் ஷிஹான்)

காங்­கே­சன்­துறை கடற்­கரைப் பகு­தியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்­கட்­டுக்­களை கடற்­ப­டை­யினர் கைப்­பற்­றி­ய­துடன் சந்­தே­கத்தின் பேரில் இரு­வரைக் கைது செய்­துள்­ளனர்.

நேற்­று முன்­தினம் மாலை சந்­தே­கத்­துக்கு இட­மாக படகு ஒன்று காணப்­ப­டு­வ­தாக கிடைக்­கப்­பெற்ற தக­வ­லை­ய­டுத்து குறித்த படகை கடற்­ப­டை­யினர் சோத­னை­யிட்­டுள்­ளனர்.

இதன் போது அந்தப் படகில் இரு பொதி­களில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 37 தங்க பிஸ்­கட்­டுக்கள் மீட்­க­பட்­டுள்­ள­துடன் இருவர் கைது செய்­யப்­பட்­டனர்.

அத்­துடன் அப்­ப­டகில் மீட்­கப்­பட்ட தங்க பிஸ்­கட்­டுக்கள் தெல்­லிப்­ப­ழையில் உள்ள சுங்க திணைக்­க­ளத்­திடம் கைய­ளிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்ட இரு­வரும் மாதகல் பகு­தியைச் சேர்ந்தவர்கள் எனவும் மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 2 கோடி ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 26 times, 1 visits today)

Post Author: metro