ட்ரக்டர் வாகனத்தை செலுத்தும் நாய்

பிரிட்டனிலுள்ள நாயொன்று, ட்ரக்டர் வாகனத்தை செலுத்தி வியக்க வைக்கிறது.


பிரிட்டனின் வட அயர்லாந்துப் பிராந்தியத்திலுள்ள இந்த நாய் கோல்டன் ரெட்றீவர் இனத்தைச் சேர்ந்தது. 6 வயதான ஆண் நாய் இது. ரம்போ என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.


தனது எஜமானரின் ட்ரக்டரை இந்த நாய் செலுத்துகிறது. இந்த ட்ரக்டர் மூலம் எஜமானரின் வயலை உழுவதற்கும் வயலில் சோளத்தை அறுவடை செய்வதற்கும் இந்த நாய் உதவுகிறது.


ரம்போவின் உரிமையாளரான ஓய்வு பெற்ற லொறி சாரதி அல்பேர்ட் றீட் (66) இது தொடர்பாக கூறுகையில், நாய் ட்ரக்டரை செலுத்துகிறது என்றால் எவரும் நம்பமாட்டார்கள்.  ஆனால், அவர்கள் நேரில் இதை காணும்போது ஆச்சரியத்தால் பேசுவதற்கு வார்த்தையின்றி தடுமாறுவர். இந்த நாயுடன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிடித்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro