ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி: வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி, ஸ்ரீல.மு.கா. அ.இ.ம.கா, தே.காவுக்கு கணிசமான ஆசனங்கள்; காத்தான்குடியில் சகல வட்டாரங்களிலும் சு.க. வெற்றி

நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அதிக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

நேற்று மாலை இச்செய்தி அச்சுக்குப் போகும் வரை வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன 223 உள்­ளூ­ராட்சி சபை­களைக் கைப்­பற்றி முன்­ன­ணி­யி­லி­ருந்­தது.

ஐக்­கிய தேசியக் கட்சி 42 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்­தது. இலங்கை தமிழ­ரசுக் கட்சி 38 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கைப்­ப­றி­யி­ருந்­ததுடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் 7 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை சுவீ­க­ரிக்க முடிந்­தது. ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பு நான்கு இடங்­களைப் பெற்­றி­ருந்­தது.

இதே­வேளை, காத்­தான்­கு­டியில் அனைத்து வட்­டா­ரங்­க­ளையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி கைப்­பற்­றி­யது.

சாய்ந்­த­ம­ரு­துவில் ஆறு வட்­டா­ரங்க­ளிலும் சுயேச்சைக் குழு (தோடம்­பழச் சின்னம்) வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

இதே­வேளை, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பல சபை­களைக் கைப்­பற்­றி­ய­துடன் தேசிய காங்­கிரஸ் இரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளது.

இதே­வேளை, நாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­காக உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான வாக்­க­ளிப்பு 65 சத வீத­மாக பதி­வா­கி­யி­ருந்­த­தா­கவும் பாரிய வன்­முறைச் சம்­ப­வங்கள் எதுவும் பதி­வா­காத நிலையில் அமை­தி­யான முறையில் தேர்தல் இடம்­பெற்­ற­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­களின் வாக்­க­ளிப்பு நிறைவு பெற்ற பின்னர் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊடக சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் மக்கள் தங்கள் கட­மை­ய­றிந்து செய­லாற்­றி­யுள்­ளனர். இதனால் இம்­முறை ஏனைய உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களை போல் அல்­லாமல் 65 சத வீத வாக்­க­ளிப்பு பதி­வா­கி­யுள்­ளது. இந்த வாக்­க­ளிப்பு பதி­வா­னது ஜனா­தி­பதித் தேர்­தலை போல் மக்கள் உணர்­வு­பூர்­வ­மாக செயற்­பட்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது குறித்து தேர்தல் ஆணை­யகம் மற்றும் பொது­மக்கள் அனை­வரும் பெரு­மைப்­பட வேண்டும். அமை­தி­யான தேர்தல் ஒன்­றினை நடத்தி முடித்­ததில் தேர்தல் ஆணைக்­குழு மிகவும் பெரு­மை­ய­டை­கின்­றது. ஆயினும் கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் வாக்­கு­பெட்­டி­களை எடுத்துச் செல்­வதில் ஏற்­பட்ட கால­தா­மதம் மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் போக்­கு­வ­ரத்து மற்றும் அதி­கா­ரி­களை வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு கட­மையில் அமர்த்­து­வதில் ஏற்­பட்ட கால­தா­மதம் குறித்து தேர்­தல்கள் ஆணைக்­குழு கவ­லை­ய­டை­கின்­றது.

எது எவ்­வா­றா­யினும் இலங்­கையில் இது­வ­ரையில் நடை­பெற்­றுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை விட இம்­முறை அதி­க­ள­வான வாக்­குகள் பதி­வா­கி­யுள்­ளன. இது பெரு­மைப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

கொழும்பு மற்றும் கம்­பஹா பகு­தியில் எது­வித வன்­முறை சம்­ப­வங்­களும் பதி­வா­க­வில்லை. அனைத்தும் சமா­தான முறையில் ஒரு தேர்தல் நடை­பெற்­றுள்­ளது. சில இடங்­களில் சிறிய வன்­மு­றைகள் பதி­வா­கி­யுள்­ளன. இக்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, தேர்தல் வாக்­க­ளிப்பு தினத்தில் தேர்தல் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டமை தொடர்பில் 39 பேர் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்­களில் 8 வேட்­பா­ளர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தேர்தல் வாக்­க­ளிப்பு ஆரம்­ப­மா­னது முதல் மாலை 4 மணி நேரக் காலப்­ப­கு­தியில் வாக்­கா­ளர்­க­ளுக்கு இடைஞ்சல் ஏற்­ப­டுத்­தி­யமை, வாக்­குச்­சா­வ­டி­க­ளுக்கு அருகில் பிர­சார பணி­களில் ஈடு­பட்­டமை தொடர்­பி­லேயே இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மேலும் கொழும்பு மோதரை பிர­தே­சத்தில் இரண்டு தேர்தல் கட்­சிகள் சார்­பான இரு­வ­ரி­டையே கருத்து மோதல் ஏற்­பட்­ட­தா­கவும் அது கைக­லப்­பாக மாறு­வ­தற்கு முன்னர் பொலி­ஸா­ரினால் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தா­கவும் மோதரை பொலிஸ் நிலை­யத்தில் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில், ஏறாவூர் நகர பகு­தியில் தேர்தல் வன்­முறை கார­ண­மாக மூவர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இவர்­களில் இரண்டு வேட்­பா­ளர்­களும் ஒரு ஆத­ர­வா­ளரும் உள்­ள­டங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தியில் பிர­பல கட்சி ஒன்றின் ஆத­ர­வாளர் ஒருவர் மீதும் வேட்­பா­ளர்கள் இருவர் மீது தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­மையும் பொலிஸ் நிலை­யத்தில் பதி­வா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தல­வாக்­கலை கிறேட்­வெஸ்டன் பகு­தியில் வைத்து மாதிரி வாக்குச் சீட்டை விநி­யோ­கித்த குற்­றச்­சாட்­டிலும் ஆண் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவ்­வாறு பல்­வேறு பகு­தி­களில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டுள்ள அனை­வரும் இன்று திங்­கட்­கி­ழமை அந்­தந்த பகு­தி­க­ளுக்­கு­ரிய நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும். மேல­திக விசா­ர­ணை­களை அவ்வவ் பகு­தி­க­ளுக்கு பொறுப்­பான பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் ெற்­றுள்­ள­மையும் பொலிஸ் நிலை­யத்தில் பதி­வா­கி­யுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பகுதியில் வைத்து மாதிரி வாக்குச் சீட்டை விநியோகித்த குற்றச்சாட்டிலும் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் இன்று திங்கட்கிழமை அந்தந்த பகுதிகளுக்குரிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். மேலதிக விசாரணைகளை அவ்வவ் பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 97 times, 1 visits today)

Post Author: metro