தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் – ஐ. தே. க. பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம்

(எம்.எம்.மின்ஹாஜ்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலை­வணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடி­வினை கருதுகின்றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்­பாடுகளை சரியான முறையிலும் வேக­மாகவும் முன்னெடுக்க நாம் பாடு­படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.


இதன்படி இருமுறை மக்கள் ஆணையை வழங்கி எம் மீது சுமத்திய பொறுப்புகள் அனைத்தையும் உரிய முறை­யில் நிறைவேற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறு­பேறுகள் தொடர்பில் அமைச்சர் ஊட­கங்­களுக்கு விடுத்துள்ள அறிக்கையி­லேயே அவர் மேற்கண்டவாறு தெரி­ வித்தார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரி­விக் கப்­பட்டுள்ளதாவது, உள்ளூரா ட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலை வணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கை­யாகவே தேர்தல் முடிவைக் கருதுகின்­றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்­தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம்.

முன்னைய காலங்களின் போது நாம் முன்னெடுத்த காரி­யங்கள் பல உள்­ளன. அவற்­றில் சில மக்கள் முன் காட்சி­யளிக்­­கின்றன. அதற்கு புதிய தேர்தல் முறைமை சிறந்த உதாரண­மாகும். கட்சி வேட்­பாளர்கள் ஒருவரை ஒரு­வர் மோதிக் கொள்ளும் முறைமைக்கு பதி­லாக சீரான தேர்தல் சூழலொன்றை ஏற்படுத்தி­யுள்ளோம்.

தேர்­தலுக்காக அரச உடைமைகள் மற்றும் வளங்களை துஷ்பிரயோகம் செய்வதனை முழுமை­யாக தடுத்து நிறுத்தியுள்ளோம். முன்­னைய காலங்களில் கல்வி மற்றும் சுகா­தார துறை உட்பட பல துறை­களில் இன்­­னோ­ரன்ன சேவைகளை செய்­துள்­ளோம்.
நாம் முன்னெடுத்த சேவைகள் பல கண்ணுக்கு தெரியாவிட்டாலும் நீண்ட காலங்களுக்கு பின்னர் எமது சேவையின் பிரதிபலன் மக்களை வந்தடையும். அத்­துடன் எம்மால் நிறைவேற்ற முடி­யாமல் போன வைகளும் உள்ளன. ராஜபக் ஷ ஆட்சி யின் போது பெறப்பட்ட கடனும் கால நிலை மாற்றங்களுக்கு இதற்கு வழி வகுத்தன. எனினும் எமது வாக்குறுதி­களை நிறைவேற்றுவதற்கு நாம் முழுமூச்சுடன் செயற்படுவோம் என்றார்.

(Visited 33 times, 1 visits today)

Post Author: metro