இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபை தவிர்ந்த ஏனைய 11 சபைகளையும் ஆட்சி செய்யும் – – ஆறுமுகன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் நுவ­ரெ­லியா மாவட்டத்தில் நுவ­ரெ­லியா மாந­கர சபையை தவிர்த்து ஏனைய 11 சபை­க­ளையும் ஆட்சி செய்யும்.


13 வரு­டங்­க­ளுக்கு பின்­பாக கொட்­ட­கலை பிர­தேச சபையை ஆட்சி செய்­வதில் பெரு­மி­த­ம­டை­வ­தாக நுவ­ரெ­லியா மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ள­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார்.
ஹட்டன் நக­ரத்தில் நேற்று நடை பெற்ற தேர்தல் வெற்­றிக்­கான மக்கள் ஒன்றுகூடலில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சாத­னையை ஏற்­ப­டுத்­துவோம். வர­லாற்று மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­துவோம் என்ற இலக்­கினை முன்­வைத்து தேர்தல் களத்தில் குதித்த நாம் 9 சபைகள் கிடைத்தால் போதும் என்று ஒரு வேளையில் எண்­ணினோம்.

ஆனால் இன்று 11 சபை­களை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆட்சி செய்யும் என்­பதில் எவ்­வித அச்­சமும் இன்றி மக்­க­ளிடம் தெரி­விப்­பதில் மட்­டற்ற மகிழ்ச்சி அடை­கின்றோம் என்­பதை ஹட்­டனில் தெரி­விப்­பதில் பெரு­மிதம் அடை­கின்றோம் என்றார்.
13 வரு­டங்­க­ளுக்கு பின்­பாக கொட்­ட­கலை பிர­தேச சபையை கைப்­பற்­றி­யுள்ள நாம் ஹட்டன் மாந­க­ரத்தில் அபி­வி­ருத்தியினூடாக ஒரு மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஹட்டன் நகர சபையை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தான் ஆட்சி செய்யும் என உறு­தி­யாக தெரி­விக்­கிறோம்.

எம்­மோடு கைகோர்த்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மற்றும் முன்னாள் அமைச்­சரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சீ.பீ.ரத்­நா­யக்க ஊடாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் காணப்­படும் 12 உள்­ளூ­ராட்சி சபை­களில் நுவ­ரெ­லியா மாந­கர சபையை தவிர்த்து ஏனைய 11 சபை­க­ளையும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆட்சி செய்யும் என்­பதை துணி­வுடன் தெரி­விக்­கின்றேன்.
தல­வாக்­கலை நகர சபை, கொட்­ட­கலை பிர­தேச சபை, அக்­க­ரப்­பத்­தனை பிர­தேச சபை, நோர்வூட் பிர­தேச சபை, மஸ்­கெ­லியா பிர­தேச சபை ஆகிய முக்­கிய பிர­தேச சபை­களை வெற்­றியின் பாதையின் கீழ் ஆட்­சிக்கு கொண்டு வந்த நாம் ஏனைய பிர­தேச சபை­க­ளையும் ஆட்சி செய்வோம் என தெரி­வித்தார்.

இந்த மக்கள் சந்­திப்பில் சீ.பீ.ரத்­நா­யக்க கருத்துத் தெரி­விக்­கையில், ஆறு­முகன் தொண்­டமான் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து இம்­முறை நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தனித்தும் கூட்டு சேர்ந்தும் போட்­டி­யிட்டு இருந்­தாலும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ளூர் அதி­கார சபை­களை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக நாம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுடன் இணைந்து ஆறு­முகன் தொண்­ட­மானின் கரத்தைப் பலப்­ப­டுத்தி நுவ­ரெ­லியா மாந­கர சபையை தவிர்ந்த ஏனைய உள்­ளூ­ராட்சி சபை­களின் ஆட்சி அதி­கா­ரங்­களை கைப்­பற்­றினோம்.

இதற்­காக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸு­டனும் ஆறு­முகன் தொண்­ட­மா­னு­டனும் கைகோர்த்து செயல்­பட நாம் தயா­ராக இருக்­கின்றோம் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தான பொறுப்­பா­ள­ராக செயற்­ப­டு­பவன் நான் என்ற அடிப்­ப­டையில் உறு­தி­ய­ளிக்­கின்றேன்.

இந்த வகையில் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் மலையக மக்களின் உயர்வுக்கான இந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத் தியின் ஊடாக பாரிய மாற்றத்தினை முன்னெடுப்போம் என உறுதியாக தனது உரையில் தெரிவித்தார்.

(Visited 46 times, 1 visits today)

Post Author: metro