நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்; தமிழ் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம் – நாமல் ராஜபக் ஷ

மக்கள் தமது ஆணை எது என்பதை தெளிவாக வெளிப்­படுத்தி யுள்ளதால், நாடாளு­மன்­றத் தேர்­தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பி­னர் நாமல் ராஜபக் ஷ தெரி­வித்துள் ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன கட்சி அதிக சபை­களை வென்ற நிலை­யில் சமூக வலைத்­தளங்களில் நாமல் ராஜபக் ஷ மேற்­கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் தாம் முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆணை எது என்­பதை தெளிவாகவும் உரத்தும் தெரிவித்­துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலிலே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி யாக உள்ளதால், ஜனாதி­பதி உடனடியாக நாடாளு­மன்றத்தை கலைக்க வேண்டும். இதைத் தான் மக்­கள் எதிர்­பார்க்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ்ப் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ்ப் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கின்­­றோம்.

அவர்களுடன் மேலும் நெருக்க­­மாக இணைந்து பணியாற்று­வதற்கான வழி­களை நாம் நுட்பமாக ஆராய்கின்­றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்க­ளுக்காகவும் பேத­மின்றி ஓய்வின்­றிச் சேவையாற்றக் காத்திருக்கி­றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 86 times, 1 visits today)

Post Author: metro