இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை நேரில் அழைத்து பாராட்டிய ஜனாதிபதி

சகல வட்­டா­ரங்­க­ளிலும் வெற்றி பெற்று தனிப்­பெ­ரும்­பான்­மை­யுடன் காத்­­தான்­குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்சி ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒத்­­து­ழைப்பு வழங்­கிய காத்­தான்­குடி மக்­க­ளுக்கும் இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­­புல்­லாஹ்­வுக்கும் நன்­றி­க­ளையும் பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்துக் கொள்­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் நேற்றுக் காலை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சித் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

இந்த சந்­திப்பு தொடர்பில் கருத்துத் தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ், உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சகல வட்­டா­ரங்­க­ளிலும் வெற்றி பெற்று தனிப்­பெ­ரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைத்த ஒரே ஒரு நகர சபை கத்­தான்­குடி நகர சபை மாத்­தி­ரமே. இதற்­காக கட்சித் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன எனக்கும் வாக்­க­ளித்த காத்­தான்­குடி மக்­க­ளுக்கும் விசேட நன்­றி­க­ளையும் பாராட்­டுக்­க­ளையும் தெரி­­வித்துக் கொண்டார். அத்­துடன் வெகு­­வி­ரைவில் காத்­தான்­கு­டிக்கு தான் வர­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி என்­னிடம் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிட்டு தேர்­தலில் வெற்றி பெற்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு விசேட நிதி ஒதுக்­கீ­டு­களை செய்து பாரிய அபி­­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் ஜனா­தி­­பதி இதன்­போது உறுதி வழங்­கி­னார்.

மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர், காத்­தான்­குடி உள்­ளிட்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கிய சக­ல­ருக்கும் எனது சார்­பிலும் கட்சித் தலைவர் சார்­பிலும் நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். விசே­டமாக காத்­தான்­குடி மக்கள் எம்­மீது வைத்­துள்ள நம்­பிக்கை வீண்­போ­காமல் நாங்கள் எமது பணிகளை சரியான முறையில் முன்­ ­னெடுப்போம்.

ஜனாதிபதியின் மனதில் காத்தான்குடி மக்கள் தொடர்பி­லும் முஸ்லிம்கள் தொடர்பிலும் நன்­மதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை ஏற்படுத்தவே நாங்கள் பாடுபட்டோம். என்றார்.

(Visited 141 times, 1 visits today)

Post Author: metro