மக்­களின் மனங்­களை வென்­ற­வர்கள் என்றும் மறையப்போவ­தில்லை என்­ப­தனை நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு மக்கள் புரியவைத்­துள்­ளனர் – முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ

(இரா­ஜ­துரை ஹஷான்)

நல்­லாட்சி அர­சாங்கம் எம்மைப் பழி­வாங்­கி­னாலும், நாட்டு மக்கள் கைவி­ட­வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலின் பெறு­பே­றுகள் தொடர்பில் நேற்று வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யிலே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, நல்­லாட்சி அர­சாங்கம் கடந்த காலங்­களில் எமது வெற்­றியை சீர்­கு­லைக்க பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டது.

தொடர்ச்­சி­யான அர­சியல் பழி­வாங்­கல்­களை குற்­ற­மாக சுமத்தி வந்­தது. கடந்த காலங்­களில் மக்­களின் மனங்­களை வென்­றதன் பயனே இன்று பாரிய வெற்­றிக்கு அடித்­த­ள­மிட்­டுள்­ளது.

கடந்த காலங்­களில் நாட்டு மக்கள் பல்­வேறு தீர்க்க முடி­யாத பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளாகி வந்­தனர். தொடர்ச்­சி­யாக பொய்­யான வாக்­கு­று­தி­களை நம்பி மக்கள் ஏமாற்­றமே கண்டு வந்­தனர்.

ஜன­நா­யக நாட்டில் மக்­க­ளுக்கு ஒரு கட்­டத்தில் நிர்­வா­கிகள் பொறுப்பு கூற வேண்டும் என்ற விட­யத்­தினை மறந்து நல்­லாட்சி அர­சாங்கம் தான்­தோன்­றித்­த­ன­மா­கவே செயற்­பட்­டது.

தமது வாழ்க்­கையின் அடிப்­படை உரி­மை­க­ளையும் பல துய­ரங்­க­ளையும் அனு­ப­வித்த மக்­களின் ஆத­ரவின் பிர­தி­ப­லனே இந்த வெற்றி மக்­களின் மனங்­களை வென்­ற­வர்கள் என்றும் மறையப் போவதில்லை என்ற விட­யத்தை நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நாட்டு மக்கள் புரிய வைத்­துள்­ளனர்.

கிடைக்­கப்­பெற்ற இந்த வெற்றி பாரிய அபி­வி­ருத்­திக்கான ஒரு பாதை­யினை உரு­வாக்கி கொடுத்­துள்­ளது. இத னைப் பயன்­ப­டுத்தி எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் அரசியலிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

(Visited 51 times, 1 visits today)

Post Author: metro