264 கிலோ கழிவுத் தேயி­லை­யுடன் 18 வய­தான இளைஞர் கைது

(க.கிஷாந்தன்)

264 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன் வெலி­மடை புகுல்­பொல பகு­தியில் 18 வய­தான இளைஞர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


குறித்த கழிவுத் தேயிலைத் தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி பதுளை – வெலி­மடை பிர­தான வீதி ஊடாக அட்­டம்­பிட்­டிய பகு­தி­யி­லி­ருந்து வெலி­ம­டைக்கு கொண்டு செல்லும் போது பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.


அதன்பின் கைப்­பற்­றப்­பட்ட கழிவுத் தேயிலைத் தூளையும் வாக­னத்­தையும் கைப்­பற்­றிய பொலிஸார் சந்­தேக நப­ரையும் கைது செய்து வெலி­மடை பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.


சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞரை வெலி­மடை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­ப­தாக வெலி­மடை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார். இச்­சம்­பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro