இன்னும் பல மாபெரும் டென்னிஸ் பட்டங்களை வென்றெடுக்க வேண்டும் என்கிறார் செரீனா

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இன்னும் பல மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) பட்டங்களை வென்றெடுக்க வேண்டும் அவை சுலபமாக வரக்கூடாது என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்தார்.


ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக விளையாடி வென்றெடுக்க வேண்டும் எனவும் வெறுமனே சுலபமாக அவை வரக்கூடாது எனவும் அவர் கருதுகின்றார்.

தொழில்சார் டென்னிஸ் யுகத்தில் 23 மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டங்களை வென்றுள்ள செரினா வில்லியம்ஸ், இன்னும் 2 மாபெரும் சம்பியன் பட்டங்களை வென்றால் சாதனையாளராவார். தற்போது மார்க்ரட் கோர்ட் 24 மாபெரும் டென்னிஸ் வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றார்.


தலைப்பிரசவத்திற்காக ஆறு மாதங்கள் படுக்கையில் ஓய்வு பெற நேரிட்டதாக கடந்த செப்டெம்பர் மாதம் ஒலிம்பியா என்ற குழந்தைக்கு தாயான பின்னர் செரீனா தெரிவித்தார். ஒரு தாய் என்ற வகையில் டென்னிஸ் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.

இனிமேலும் எனக்கு பணமோ பட்டங்களோ புகழோ தேவையில்லை என்றார் செரீனா. ‘‘குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்துவிட்டதால் அது உதவியாயிருக்கும். எனினும் அளவுக்கு அதிகமான ஆர்வம் காரணமாக நான் தோல்வி அடைகின்றேன். ஒலிம்பியா பிறந்த பின்னர் அளவுக்கு அதிகமான ஆர்வம் மறைந்துவிட்டது. எவ்வாறாயினும் நான் இன்னும் பல மாபெரும் டென்னிஸ் வெற்றிகளை ஈட்டவேண்டும்’’ என செரீனா மேலும் குறிப்பிட்டார். ஆனால் எப்போது மாபெரும் போட்டிகளில் விளையாட வருவது என்பது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro