நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல்: கட்டடம், உடைமைகளுக்குச் சேதம்; வெடிக்காத நிலையில் 8 குண்டுகள் கைப்பற்றப்பட்டன

(காங்­கே­ய­னோடை நிருபர், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,சதீஸ்)

காத்­தான்­குடி கடற்­கரை வீதியில் அமைந்­துள்ள நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிராந்­தியக் காரி­யா­ல­யத்தில் நேற்று அதி­காலை குண்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இக்­குண்டு வெடிப்பின் கார­ண­மாக கட்­டி­டத்தின் ஒரு பகுதி சேத­ம­டைந்­த­துடன் அங்­கி­ருந்த பொருட்கள் சிலவும் தீயில் எரிந்­துள்­ளன. மேலும் எட்டுக் குண்­டு­களை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் அவ்­வ­ளா­கத்­தி­லி­ருந்து மீட்­டுள்­ளனர்.

இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து அங்கு விரைந்த காத்­தான்­குடி பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் விசா­ர­ணை­களை மேற்கொண்­ட­துடன் அங்கு வெடிக்­காத நிலையில் காணப்­பட்ட 8 குண்­டு­க­ளையும் மீட்­டுள்­ளனர்.

இந்தக் குண்­டுகள் உள்­ளூரில் தயா­ரிக்­கப்­பட்­ட­தாக இருக்­க­லா­மெ­னவும் பொலிஸார் சந்­தேகம் தெரி­வித்­தனர். சம்­பவ இடத்­துக்கு மட்­டக்­க­ளப்பு பொலிஸ் தட­வியல் பொறுப்­ப­தி­காரி ஐ.பி.ரவிச்­சந்­திரன் தலை­மையில் சென்ற பொலிஸார் தட­வியல் அதி­கா­ரிகள் பரி­சோ­த­னை­க­ளை மேற்கொண்­டனர்.

இந்த சம்­பவம் தொடர்பில் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக காத்­தான்­குடி பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, இந்தச் சம்­பவம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்த நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தலை­மைத்­துவ சபை உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் பழிலுல் ஹக் “நேற்று அதி­காலை 3.55 மணி­ய­ளவில் எமது பிராந்­திய அலு­வ­லகம் குண்­டுத் ­தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னது. இச்­சம்­பவம் எமது உயி­ரையும் உைட­மை­க­ளையும் இலக்கு வைத்து நடத்­தப்­பட்­ட­தாக இருக்­கலாம்.

ஜன­நா­யக நாட்டில் தேர்­தலில் போட்டி போடும் உரிமை அனை­வ­ருக்கும் உண்டு. ஆனால் தேர்­தலின் பின்னர் இவ்­வா­றான பழி­வாங்கும் செயல்­களில் ஈடு­ப­டு­வது கண்­டிக்கத்தக்க விட­ய­மாகும்.

இது தொடர்­பாக நாங்கள் காத்­தான்­குடி பொலி­ஸா­ருக்கும் ஏனைய உயர்­மட்­டங்­க­ளுக்கும் முறைப்­பா­டு­களைச் செய்­துள்ளோம். அத்­தோடு காத்­தான்­கு­டி­யி­லுள்ள உல­மாக்கள், புத்தி ஜீவிகள் மற்றும் பொது நிறு­வ­னங்கள் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட்டு இவ்­வா­றான செயற்­பா­டு­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்” என்றார்.

(Visited 30 times, 1 visits today)

Post Author: metro