ஈரானிய தூதரகத்தில் தீ: 200 சதுரஅடி பரப்பு நாசம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு பெளத்­தா­லோக்க மாவத்­தையில் உள்ள ஈரான் தூத­ர­கத்தின் கட்­டடத்தில் நேற்று திடீர் தீ பரவல் ஏற்­பட்­டது.

இரண்டு மாடிகள் கொண்ட அந்த கட்­டி­டத்தில் இந்த தீ பரவல் ஏற்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் இந்த பரிய தீயைக் கட்­டுப்­ப­டுத்த கொழும்பு மாந­கர சபையின் தீய­ணைப்பு வாக­னங்கள் இரண்டு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­கவும், பாரிய போராட்­டத்தின் பின்னர் தீயை முழு­மை­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொன்­டு­வந்­த­தா­கவும் தீய­ணைப்பு படை­யினர் தெரி­வித்­தனர்.

இந்த தீ பர­வ­லா­னது மேல்­மா­டியில் ஆரம்­பித்­துள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் நிலையில், குளி­ரூட்டும் இயந்­தி­ரத்தில் ஏற்­பட்ட மின் கசிவு கார­ண­மாக இந்த தீ பரவல் ஏற்­பட்­டுள்­ள­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ளன.

தீயினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்­ப­டாத போதும், மேல்­மா­டியில் 200 சதுர அடி பரப்பு தீக்கிரையாகி யுள்ளதாக தீயனைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

Post Author: metro