சியாம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியை அச்சுறுத்திய வாஸ் குணவர்தனவுக்கு 5 வருட சிறை

(எம்.எப்.எம்.பஸீர்)

பம்­ப­லப்­பிட்டி கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் சியாம் படு­கொலை வழக்கில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­த­ன­வுக்கு நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றம் 5 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்­தது.

சியாம் கொலை வழக்கின் விசா­ரணை அதி­கா­ரி­யான அப்­போ­தைய உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கரும் தற்­போ­தைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ரு­மான ஷானி அபே­சே­க­ரவை அச்­சு­றுத்­தி­யமை தொடர்­பி­லேயே, அவரைக் குற்­ற­வா­ளி­யாகக் கண்ட நீதி­மன்றம் இந்தத் தீர்ப்பை வழங்­கி­யுள்­ளது.

கொழும்பு மேல் நீதி­மன்றின் நீதி­பதி கிஹான் குல­துங்க இந்தத் தீர்ப்பை வழங்­கி­ய­துடன் 5 வருட கடூ­ழிய சிறைக்கு மேல­தி­க­மாக 25 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் நீதி­ப­தி­யினால் விதிக்­கப்­பட்­டது. அப­ராதத் தொகையை செலுத்தத் தவ­றினால், மேலும் ஒரு வருட சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்டி வரும் என நீதி­பதி இதன்­போது எச்­ச­ரித்தார்.

சியாம் கொலை வழக்கின் விசா­ரணை அதி­கா­ரியை அச்­சு­றுத்­திய சம்­பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால் 6 குற்றச் சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. எனினும் சாட்சி விசா­ர­ணை­களின் பின்னர், முதல் குற்­றச்­சாட்டைத் தவிர ஏனைய 5 குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் வாஸ் குண­வர்­த­னவை நீதி­மன்றம் விடு­வித்­தது. இந் நிலை­யி­லேயே அரச அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய குற்றத்துக்காக 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

(Visited 28 times, 1 visits today)

Post Author: metro