தாதியை கூட்­டாக வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி வீடியோ எடுத்த இரா­ணுவக் குழு; இரா­ணுவ வைத்­தியர், இரண்டு லான்ஸ் கோப்­ரல்கள் உட்­பட மூவர் கைது!

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பின் தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­யாற்றும் யுவ­தியைக் கூட்­டாக வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி வீடியோ எடுத்­தமை தொடர்பில் இரா­ணு­வத்தின் கெப்டன் தர வைத்­தியர் ஒருவர், இரு லான்ஸ் கோப்ரல் தர சார­திகள் உள்­ளிட்ட மூவரை நார­ஹேன்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தாதிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்து, மது­பானம், கஞ்சா சுருட்டு போன்­ற­வற்றை உப­யோ­கிக்கச் செய்து அவரை இவ்­வாறு பல சந்­தர்ப்­பங்­களில் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இந்தச் சம்­பவம் தொடர்பில் பொறி­யி­ய­லாளர் எனக் கூறப்­படும் ஒருவர் உள்­ளிட்ட மூவரைத் தேடி தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கொழும்­புக்கு பொறுப்­பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்­ஜீவ மெத­வத்த, கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த டி சொய்ஸா ஆகி­யோரின் மேற்­பார்­வையில், உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன டி அல்­விஸின் ஆலோ­சா­னைக்கு அமை­வாக நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கயான் பிர­சன்ன தலை­மையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் லலித் பெத்­த­கத்த, பெண் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஜனாகீ உள்­ளிட்ட குழு­வினர் சம்­பவம் தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இது தொடர்­பாக பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­வது: இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் சேவையில் உள்ள கெப்டன் தர பல் வைத்­தி­ய­ரான சந்­தேக நபர் அங்கு சேவை­யி­லி­ருக்கும் அதே சமயம் தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்­றிலும் சேவை செய்­துள்ளார்.

இதன்­போது குறித்த தனியார் வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்றும் இளம் தாதி ஒரு­வ­ருக்கும் வைத்­தி­ய­ருக்கும் இடையில் காதல் ஏற்­பட்­டுள்­ளது.

இரு பிள்­ளை­களின் தந்­தை­யான இரா­ணுவ கெப்டன் தர வைத்தியர் தனது திரு­மண விவ­கா­ரத்தை மறைத்து காதல் கொண்ட நிலையில், புலமைப் பரிசில் ஒன்றைப் பெற்று வெளி­நாடு ஒன்­றுக்குச் செல்ல அவ­ருக்கு வாய்ப்புக் கிடைத்­துள்­ளது.

அவ்­வாறு அவர் வெளி­நாடு சென்­றி­ருந்த போது, குறித்த தாதி யின் தோழி ஒருவர் ஊடாகக் குறித்த வைத்­தியர் இரு பிள்­ளை­ களின் தந்தை என்­பது தெரிய வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அந்தத் தாதி, வைத்­தி­ய­ரான இரா­ணுவ கெப்­டனின் தொலை­பேசி அழைப்­புக்­களை புறக்­க­ணித்­துள்ளார்.

இந் நிலையில் 8 மாதங்­களின் பின்னர் நாடு திரும்­பி­யுள்ள வைத்­தியர், குறித்த தாதியை வைத்­தி­ய­சா­லைக்கு சென்று சந்­தித்து தன் மனை­வியை விவா­க­ரத்து செய்­து­விட்டு அவரை திரு­மணம் செய்­வ­தாக அவர் உறுதி கொடுத்­துள்ளார்.

அதன் பின்­ன­ரான ஒரு நாளில், குறித்த தாதியை, தனது வாக­னத்தில் நிட்­டம்­புவ பகு­தியில் உள்ள பாழ­டைந்த வீடு ஒன்­றுக்கு அழைத்துச் சென்­றுள்ள கெப்டன், அங்கு அவ­ருக்கு மது­பானம், கஞ்சா சுருட்டு ஆகி­ய­வற்றை பலாத்­கா­ர­மாக கொடுத்து அவரை பாலியல் பலாத்­காரம் செய்­துள்ளார்.

பின்னர் தனது சார­தி­யான லான்ஸ் கோப்­ர­லுக்கும் அவரை பலாத்­காரம் செய்ய சந்­தர்ப்பம் கொடுத்­துள்ளார். இதன்­போது அந்த பலாத்­கார நட­வ­டிக்­கையை அவர் வீடியோ எடுத்­துள்ளார்.

பின்னர் இந்தச் சம்­ப­வத்தை யாரி­ட­மா­வது கூறினால் கொலை செய்து டயர் போட்டு எரிப்­ப­தாக தாதியை அவர் மிரட்­டி­யுள்ளார்.

இந் நிலையில் பிறி­தொரு தினத்தில் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று குறித்த தாதியை பலாத்­கா­ர­மாக தன்­னுடன் அழைத்துச் சென்­றுள்ள கெப்டன், அவரை மொரட்­டுவ பகு­தியில் வீடொன்­றுக்கு கூட்டிச் சென்­றுள்ளார்.

அங்கு வைத்தும், மது­பானம், கஞ்­சாவை கொடுத்து அவரை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ள அவர், வீட்­டி­லி­ருந்த பொறி­யி­ய­லாளர் ஒரு­வ­ருக்கும், அப்­போது சார­தி­யா­க­வி­ருந்த லான்ஸ் கோப்ரல் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கும் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளார். இத­னையும் அவர் வீடியோ எடுத்­துள்ளார்.

இந் நிலையில் குறித்த தாதி சேவை­யாற்றும் வைத்­தி­ய­சா­லையின் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு தாதியின் நிர்­வாணப் படங்கள் சில­வற்றை கெப்டன் அனுப்­பி­யுள்ள நிலையில், அதனை அறிந்த தாதி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறையிட்டுள்ளார். இந் நிலையிலேயே வைத்தியரான கெப்டன், லான்ஸ் கோப்ரல்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கெப்டன் தங்கியிருந்த இராணுவ குடியிருப்பை சோதனையிட்ட பொலிஸார் அங்கிருந்து துஷ்பிரயோக வீடியோ அடங்கிய இரு தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர். இந் நிலையிலேயே ஏனைய சந்தேக நபர்களைத் தேடி விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(Visited 139 times, 1 visits today)

Post Author: metro