விமான நிலையம் சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் சி.ஐ.டியினர் வந்துள்ளனரா எனக்கேட்ட கோட்டாபய

(எம்.எப்.எம்.பஸீர்)

‘நான் ஓர் அமெ­ரிக்க பிரஜை. என்னால் பிர­த­ம­ராக பதவி வகிக்க முடி­யாது. தற்­போ­தைக்கு பகி­ரங்க அர­சி­யலில் குதிக்கும் எண்­ணமும் கிடை­யாது’ என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்டாபய ராஜ­பக்க்ஷ தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் தலை­மையில் கள­மி­றங்­கிய பொது ஜன பெர­முன கட்சி விசேட வெற்­றியை பதிவு செய்த நிலையில் நேற்றுக் காலை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய கோட்­டா­பய ராஜ­பக்க்ஷ, விமான நிலை­யத்தில் வைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து தெரி­விக்கும் போதே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் கோட்­டா­பய ராஜ­பக்­க்ஷ­விடம் கேள்­வி­களைக் கேட்ட நிலையில் அதற்கு அவர் பதி­ல­ளித்தார். விமான நிலைய விசேட பிர­முகர் வெளி­யேறல் வழி­யாக வெளி­யே­றிய கோட்­டா­பய ஊட­க­வி­ய­லா­ளர்கள் சூழ்ந்­தி­ருப்­ப­தனைக் கண்டு, என்ன இது? என கேள்வி எழுப்­பினார்.

அங்­கி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஙஇ­னிய காலை வணக்கம்…. உங்­க­ளுக்­காக தான் காத்­தி­ருக்­கின்றோம் என பதி­ல­ளித்­தனர்.
இதன்­போது ”ஆ…. என்னை பார்க்­கவா காத்­தி­ருக்­கின்­றீர்கள்..? ஏன்…சி.ஐ.டி.யினர் யாராவது வருகின்றார்களா?“ என சிரித்தவாறே கூறிவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

(Visited 134 times, 1 visits today)

Post Author: metro