உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சம்பவங்கள் 85 வேட்பாளர்கள் உட்பட 668 பேர் கைது!

(எம்.எப்.எம்.பஸீர்)

வேட்பு மனு தாக்கல் செய்­யப்­பட்ட தினத்­தி­லி­ருந்து நேற்று வரை நாட­ளா­விய ரீதியில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பொலிஸ் நட­வ­டிக்­கை­களின் போது 85 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 668 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அதன்­படி பொலி­ஸா­ருக்கு இக்­கா­லப்­ப­கு­தியில் 869 முறைப்­பா­டுகள் கிடைத்­த­தா­கவும் அது தொடர்பில் 37 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 162 பேரையும் 279 பொலிஸ் சுற்­றி­வ­ளைப்­புக்­களின் போது 48 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 506 பேரையும் கைது செய்­த­தாக இம்­முறை தேர்தல் மிக அமை­தி­யாக நடை­பெற்ற நிலையில் பார­தூ­ர­மான எந்த சம்­ப­வங்­களும் பதி­வா­க­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்­த­தா­வது, இம்­முறை தேர்தல் மிக அமை­தி­யாக நடந்து முடிந்­தது. வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­பட்ட தினம் முதல் தேர்தல் நடை­பெற்ற தினம் வரை­யி­லான காலப்­ப­குதி வரை பொலி­ஸா­ருக்கு கிடைத்த முறைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் 28 அபேட்­ச­கர்கள் உள்­ளிட்ட 138 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

தேர்தல் வாக்­க­ளிப்பு தினத்­தன்று 126 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றன. அது தொடர்பில் 4 அபேட்­ச­கர்கள் உள்­ளிட்ட 14 பேர் கைது செய்­யப்­பட்­டனர். வாக்­க­ளிப்பு நிறைவு பெற்ற மறு நாள் அதா­வது 11 ஆம் திகதி 45 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றன. அது தொடர்பில் 4 அபேட்­ச­கர்கள் உள்­ளிட்ட 10 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

அதே போன்று, வேட்பு மனு தாக்கல் செய்­யப்­பட்ட தினம் முதல் தேர்தல் தினம் வரை பொலிஸார் முன்­னெ­டுத்த சுற்றி வளைப்­புக்­களில் 38 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 385 பேர் கைது செய்­யப்­பட்­டனர். தேர்தல் வாக்­க­ளிப்­பன்று 73 சுற்­றி­வ­ளைப்­புக்கள் இடம்­பெற்ற நிலையில் 8 அபேட்­ச­கர்கள் உள்­ளிட்ட 122 பேர் இதன்­போது கைது செய்­யப்­பட்­டனர். நேற்று முன் தினம் 11 ஆம் திகதி மட்டும் 4 சுற்­றி­வ­ளைப்­புக்­களில் இருவர் சிக்கினர். இதன்படி மொத்தமாக 85 வேட்பாளர்கள் உள்ளிட்ட 668 பேர் கைது செய்யப்ப்ட்டனர். அவர்கள் அனைவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். என்றார்.

(Visited 13 times, 1 visits today)

Post Author: metro