மஹிந்தவின் கட்சி பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளின் மொத்த வாக்குகள் அதிகம் – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

(சேனையூர் நிருபர்)

மஹிந்த ராஜ­பக் ஷவின் கட்சி பெற்ற வாக்­கு­க­ளுடன் ஒப்பிடுகையில் ஏனைய கட்சிகளின் மொத்த வாக்­கு­கள் அதி­க­மா­கவே உள்­ளன. அத்­துடன் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த பெற்ற வாக்­கு­களை விட இந்த தேர்­தலில் சரிவு ஏற்­பட்­டுள்­ள­த­னையும் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

எனவே புதிய அர­சியல் சாச­னத்தை இந்த ஆண்­டுக்குள் உரு­வாக்க அனைத்து கட்­சியின் தலை­வர்­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்டு திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் வேட்­பா­ளர்கள் மற்றும் வெற்றி பெற்­ற­வர்கள் மத்­தியில் கருத்து தெரி­விக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து கருத்து தெரி­வித்த அவர் “மஹிந்த ராஜ­பக் ஷ மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணில் விக்­கி­ரம­சிங்க போன்ற அனைத்து கட்சித் தலை­வர்­க­ளையும் நாம் மதிக்­கின்றோம். நாட்டின் நிலை­யான ஒரு சமா­தா­னத்­துக்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும் பிரிக்­கப்­ப­டாத நாட்டுக்குள் தீர்வு ஒன்று பெற உதவ வேண்டும்.

எமக்கு அர­சியல் எதி­ரிகள் என்று எவரும் கிடை­யாது. அனை­வ­ரையும் நாம் மதிக்­கின்றோம். சர்­வ­தேச நாடுகள் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை­யிடம் வாக்கு கொடுத்­த­மைக்கு அமைய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷ நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தரத் தீர்வை பெற்றுக் கொடுத்­தி­ருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்­கிலும் கிழக்­கிலும் போட்­டி­யிட்டு கூடு­த­லான ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. எனவே பிரிக்­கப்­ப­டாத நாட்டுக்குள் உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வை தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின் றனர்” எனத் தெரிவித்தார்.

(Visited 54 times, 1 visits today)

Post Author: metro