தமிழ் மக்கள் விடுதலை, உரிமைகளுடன் வாழ வேண்டுமாயின் சம்பந்தன் போன்றவர்கள் தேசிய அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்! -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

(இராஜதுரை ஹஷான்)

நல்­லாட்சி என்ற கொடுங்­கோ­லாட்­சியின் அழிவின் ஆரம்பம் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பிர­தி­ப­லித்­துள்­ளது. கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உறுப்­பி­னர்கள் மக்­களை தொடர்ச்­சி­யாக ஏமாற்றி வந்­ததன் பயனே பாரிய தோல்­விக்­கான முதற்­கா­ரணம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் வாழ வேண்­டு­மாயின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் போன்­ற­வர்கள் தேசிய அர­சி­ய­லி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூராட்சித் தேர்­தலின் பெறு­பே­று­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி அமோக வெற்­றியை அடைந்­துள்­ளமை தொடர்பில் தெளி­வுப்­ப­டுத்­து­கையின் போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நாட்டு மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தான்­தோன்­றித்­த­ன­மான ஆட்­சிக்கு எதி­ரா­கவே தமது வெறுப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். நாட்டு மக்­க­ளுக்­காக அல்­லாமல் மேற்­கத்­தைய நாடு­களின் அதா­வது இந்­தியா,சீனா போன்ற நாடு­களின் விருப்­பத்­திற்கே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் செயற்­பட்­டனர். அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி சகல துறை­க­ளிலும் துறைசார் சர்­வா­தி­கா­ரமே காணப்­பட்­டது.

நல்­லாட்சி என்ற பெயரில் நாட்டை பிள­வு­ப­டுத்­தவே முற்­பட்­டனர். குறித்த விட­யத்தில் நாட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினர் . நாடு பிரிக்­கப்­பட்டால் குறித்த ஒரு தரப்­பினர் மாத்­திரம் நன்மை அடைவர்.

 

நாட்டை பிரிப்­பதால் தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் ஒரு சிலரே நன்மை அடைவர். மேலும், எதிர்க்­கட்சித் தலைவர் புலம்­பெ­யர்வாழ் தமி­ழர்­களை மாத்­திரம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­பவர் போன்று காணப்படுகிறார். மலைநாட்டு பிரதேசங்களின் நலனை பற்றி ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், அவர்களே தமிழ் மக்களின் ஒருமைப்பாடு பற்றி பேசுகின்றனர் என்றார்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro