சிறையில் வைத்து அலோ­சியஸ், பலி­சே­ன­விடம் விசா­ர­ணைகள்: குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு நீதிவான் அனு­மதி!

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பேப்­பர்ச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­தி­ரனின் மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக இருந்த கசுன் பலி­சேன ஆகி­யோ­ரிடம் சிறையில் வைத்து விசா­ரணை நடத்த சி.ஐ.டி. அனு­மதி பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரி­சோ­தகர் நிமல் ஜய­வீர முன்­வைத்த விசேட கோரிக்­கையை ஏற்றே நீதி­மன்றம் இந்த அனு­ம­தியை வழங்­கி­யது.

அதன்­படி இன்று 13 ஆம் திக­தியும் நாளை 14 ஆம் திக­தியும் நாளை மறு­தினம் 15 ஆம் திக­தியும் இந்த விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அனு­ம­தித்த கோட்டை நீதிவான் எழுத்து மூலம் மெகசின் சிறையின் அத்­தி­யட்­ச­க­ருக்கு உத்­த­ரவை அனுப்பி வைத்தார்.

பிணை முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சு க்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் அதில் இது­வரை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பிலும் மேல­திக விசா­ர­ணை­களை செய்ய வேண்டி இருப்­ப­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு கோட்டை நீதி­வானை தெளி­வு­ப­டுத்தி நேற்று இடை­யீட்டு மனு ஊடாக வைத்த கோரிக்­கைக்கு அமை­யவே இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி குறித்த திக­தி­களில் மெகசின் சிறைக்கு செல்லும் குற்றப் புலா­னய்வுப் பிரிவின் சிறப்புக் குழு மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது .

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் பி. அம்­பா­வல தலை­மையில் பெண் பொலிஸ் பரிசோதகர் தர்மலதா சஞ்ஜீவனீ, உப பொலிஸ் பரிசோதகர் நிமல் ஜயவீர உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் இவ்விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

Post Author: metro