1931: புதுடில்லி இந்தியாவின் தலைநகராகியது

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 13

 

1633 : கலி­லியோ கலிலி தன் மீதான விசா­ர­ணை­களை எதிர்­கொள்­வ­தற்­காக ரோம் நகரை அடைந்தார்.

1668 : போர்த்­துக்­கலை ஸ்பெய்ன் தனி­நா­டாக அங்­கீ­க­ரித்­தது.

1755 : ஜாவாவின் மட்­டாரம் பேர­ரசு “யோக்­ய­கர்த்தா சுல்­தா­னகம்” மற்றும் “சுர­கர்த்தா சுல்­தா­னகம்” என இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டது.

1880 : எடிசன் விளைவை தோமஸ் அல்வா எடிசன் அவ­தா­னித்தார்.

1914 : பொன்­னம்­பலம் அரு­ணா­சலத்­துக்கு சேர் பட்டம் பிரிட்­டனின் பக்­கிங்ஹாம் அரண்­ம­னையில் வழங்­கப்­பட்­டது.

1931 : புது­டில்லி இந்­தி­யாவின் தலை­ ந­க­ர­மா­கி­யது.

1945 : இரண்டாம் உலகப் போர் சோவியத் படைகள் ஹங்­கே­ரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்­லரின் நாசிப் படை­க­ளிடம் இருந்து மீட்­டன.

1960 : பிரான்ஸ் தனது முத­லா­வது அணு­குண்டை பரி­சோ­தித்­தது.

1971 : வியட்நாம் போரில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் உத­வி­யுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்­கி­யது.

1975 : நியூயோர்க் நகரின் வர்த்­தக மையத்தில் தீ பர­வி­யது.

1978 : சிட்­னியில் ஹில்டன் உண­வ­கத்தின் முன் குண்டு வெடித்­ததில் ஒரு காவற்­படை உத்­தி­யோ­கத்தர் உட்­பட 2 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1983 : இத்­தா­லியில் திரை­ய­ரங்கு ஒன்றில் ஏற்­பட்ட தீயினால் 64 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1990 : மேற்கு ஜேர்­மனி, கிழக்கு ஜேர்­மனி ஆகி­யன இணை­வது குறித்த இரண்­டு-­கட்டத் திட்டம் அறி­விக்­கப்­பட்­டது.

1991 : ஈராக்கில் பதுங்கு குழி­யொன்றின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் சுமார் 400 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1996: நேபாள மக்கள் புரட்சி மாவோ­யிஸ போரா­ளி­களால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

2001: எல் சல்­வ­டோரில் இடம்­பெற்ற பூகம்­பத்தில் 400 பேர் வரை கொல்­லப்­பட்­டனர்.

2008 : அவுஸ்­தி­ரே­லிய பழங்­குடி இனத்­த­வர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்­காக அந்­நாட்டு பிர­தமர் கெவின் ரூட் மன்­னிப்பு கோரினார்.

2010 : இந்­தி­யாவின் புனே நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 17 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 60 பேர் காய­ம­டைந்­தனர்.

2012 : ஐரோப்­பாவின் வேகா ரொக்கெட், ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ரகத்­தினால் முதல் தட­வை­யாக ஏவப்­பட்­டது.

2014 : இலங்­கையில் பிறந்து இந்­திய திரை­யு­லகின் மிகப் பெரிய இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ராக விளங்­கிய பாலு மகேந்திரா தனது 74 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

2017 : வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம், மலேஷியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார்.

(Visited 12 times, 1 visits today)

Post Author: metro