தமது அனர்த்த நிவாரணப் பணியாளர்கள் ஹெயிட்டியில் விபசாரத்தில் ஈடுபட்டதை ஒக்ஸ்பாம் ஒப்புக்கொண்டது

ஹெயிட்­டியில் 2010 ஆம் ஆண்டு ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தை­ய­டுத்து, அங்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த தமது பணி­யா­ளர்கள் பெண்­க­ளுடன் விபசாரத்தில் ஈடு­பட்­டதை அந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றது.

இது தொடர்­பாக பிரித்­தா­னி­யாவின் டைம்ஸ் பத்­தி­ரிகை அண்­மையில் செய்தி வெளி­யிட்­டது. இதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை மூடி­ம­றைக்கப்பட­வில்லை எனக் கூறி­யுள்ள ஒக்ஸ்பாம் அது பற்றி விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

நிவா­ரணப் பணி­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பணிப்­பாளர் உட்­பட ஏனைய பணி­யா­ளர்கள் தமது நட­வ­டிக்­கை­க­ளுக்கு எடுத்­தி­ருந்த வாடகை வீட்டில் பெண்­க­ளுடன் விபசாரத்தில் ஈடு­பட்­ட­தாக டைம்ஸ் தெரி­வித்­தது.

இதனால் ஒக்ஸ்பாம் தொண்டு நிறு வனத்துக்கு அர­சாங்கம் வழங்கும் மில்­லியன் கணக்­கான நிதியை அந் நிறு வனம் இழக்க நேரும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. தமது ஊழி­யர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­கள், சுரண்டல்களில் ஈடு­ப­டக்­கூ­டாது என்பது ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனத்தின் கொள்­கை­யாகும்.

ஆனால், அந்தக் கொள்­கைக்கு முர­ணான வகையில் ஒக்ஸ்பாம் பணி­யா­ளர்­களின் இந்தச் செயல் அமைந்­தி­ருக்­கி­றது. இது குறித்து டைம்ஸ் பத்­தி­ரிகை திரட்­டிய தக­வல்­களில், இந்தப் பாலியல் சர்ச்­சையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு அது குறித்து எச்­ச­ரிக்கை செய்­யப்­ப­ட­வில்லை.

அவர்கள் வேறு தன்­னார்வத் தொண்டர் அமைப்­பு­களில் தொழில் வாய்ப்பு பெற அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த சம்­பவம் மூடி மறைக்­கப்­பட்­ட­தாக முன்பு ஒக்ஸ்பாம் சர்­வ­தேச நிவா­ரண அமைப்பின் செய­லா­ள­ராக இருந்த பிரீத்தி படேலும் கவலை தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், சம்­பவம் மூடி மறைக்­கப்­ப­ட­வில்லை, அது தொடர்­பாக தமக்கு 2011 ஆம் ஆண்டு தெரி­விக்­கப்­பட்­ட­தாக பிரித்­தா­னிய அறக்­கட்­டளை ஆணை­யகமும் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றது.

சம்­பவம் தமது கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதும் உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் அதை­ய­டுத்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நான்கு பேர் பணி­நீக்கம் செய்­யப்­பட்­ட­தா­கவும் நிவா­ரண உத­வி­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்த பணிப்­பாளர் உட்­பட மேலும் மூவர் இரா­ஜி­னாமா செய்­த­தா­கவும் கடந்த வெள்ளிக்­கி­ழமை அது தெரி­வித்­தது.

சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கண்­டு­பி­டித்து அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதே எமது பிர­தான நோக்கம். விசா­ரணை மற்றும் தமது நடவடிக்கைகள் பற்றி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தாக ஒக்ஸ்பாம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஒக்ஸ்பாம் உலகெங்கிலுமுள்ள 90க்கும் மேற்பட்ட நாடுகளில் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 117 times, 1 visits today)

Post Author: metro