‘சவூதி பெண்கள் அபாயா அணியத் தேவையில்லை’ – சிரேஷ்ட மதகுரு தெரிவிப்பு

பெண்கள் பொது இடங்­களில் தமது உடலை மறைக்கும் விதத்தில் அபாயா அணியத் தேவை­யில்லை என சவூதி அரே­பி­யாவின் சிரேஷ்ட மத­குரு ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் அதி உயர் இஸ்­லா­மிய மதப் பேர­வையின் உறுப்­பி­ன­ரான ஷேக் அப்­துல்லா அல் முத்­தலாக் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

உள்­நாட்டு ஊட­க­மொன்­றுக்கு இது குறித்து அவர் கூறு­கையில், ‘‘உல­கி­லுள்ள 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான முஸ்லிம் பெண்கள் அபாயா அணி­வ­தில்லை. எனவே, எமது பெண்­களை அபாயா அணி­யும்­படி கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது’’ எனத் தெரி­வித்­துள்ளார்.

இந்தக் கருத்­துக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் சமூக ஊட­கங்­களில் பலர் கருத்துத் தெரி­வித்­துள்­ளனர். ‘மத­குரு தனது கருத்துக் குறித்து தொலைக் காட்­சியில் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இதைத் திரும்­பப்­பெற வேண்டும்’ என ஒருவர் கூறி­யுள்ளார்.

அதே­நேரம் அவ­ரு­டைய கருத்து சரி­யா­னதே எனவும் சிலர் தெரிவித்துள்­ளனர். கடு­மை­யான மத சட்­ட­திட்­டங்­களைப் பின்­பற்றும் நாடு­களில் சவூதி அரே­பி­யாவும் ஒன்­றாகும். தற்போதைய சட்டப்படி சவூதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்­மைக்­கா­லங்­களில் பெண்கள் விட­யத்தில் சில கட்­டுப்­பா­டு­களை சவூதி அர­சாங்கம் தளர்த்­தி­யுள்­ளது. இந்த வருடம் முதல் பெண்கள் வாகனம் செலுத்­து­வ­தற்கும் விளை­யாட்டு அரங்­கு­களில் கால்­பந்து போட்­டி­களைக் கண்­டு­க­ளிக்­கவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

(Visited 200 times, 1 visits today)

Post Author: metro