நல்லாட்சி அரசாங்கத்தில் உச்சகட்ட மோதல்: ரணில் விலக வேண்டும் – ஸ்ரீல.சு.க. தீர்மானம்; தனியாக ஆட்சியமைப்போம் – ஐ.தே.க. தெரிவிப்பு

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­தான பங்­காளிக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் உச்சகட்ட முறு கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

உள்ளூராட்சித் தேர்­தலில் ஆளும் தரப்பினர் தோல்வியுற்ற பின்னர், இக்­கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது.

பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

அதே­வேளை, தாம் தனி­யாக அர­சாங்­கத்தை அமைக்கப்போவ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

பிர­தமர் ரணில் விக்கிரமசிங்கவை இராஜி­னாமா செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அங்­கத்­த­வர்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் இத்­தீர்­மா­னத்தை அக் ­கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார் என பிபிசி சிங்­கள சேவை தெரி­வித்­துள்­ளது.

புதிய பிர­த­ம­ராக ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து ஒரு­வரை தெரிவு செய்­யு­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருக்கு ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார் என ஸ்ரீல.சு.க.வைச் சேர்ந்த அமைச்சர் ஒரு­வரை மேற்­கோள்­காட்டி பி.பி.சி. தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக கரு ஜய­சூ­ரிய அல்­லது சஜித் பிரே­ம­தாச நிய­மிக்­கப்­பட வேண்டும் என கோரிக்­கைளக் எழுந்­துள்­ள­தா­கவும் பி.பி.சி. தெரி­வித்­துள்­ளது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எம்.பிகள் சில­ரையும் இணைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்சி தனி­யான அர­சாங்கம் அமைக்கும் என ஐ.தே.கவினர் தெரி­வித்­துள்­ளனர்.

ஆனால், இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எம்.பிகளை தான் அனு­ம­திக்கப் போவ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தி­ன­மி­ரவு ரயிலைச் சந்­தித்து பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ராஜி­னாமாச் செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

ஆனால் அவரின் கோரிக்­கையை ஏற்க பிர­தமர் மறுப்புத் தெரி­வித்­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த நிலையில் தாங்கள் ஒரு முடிவை எடுக்­கா­விட்டால் தான் தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டி­வரும் என ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பிர­தமர் ரணி­லிடம் தெரி­வித்­தி­ருந்­தமையை ஏற்க பிர­தமர் மறுப்புத் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாங்கள் ஒரு முடிவை எடுக்காவிட்டால் தான் தீர்மானங்களை எடுக்க வேண்டிவரும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன பிரதமர் ரணிலிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 86 times, 1 visits today)

Post Author: metro