நாட்டின் தேசிய அர­சி­யலை தலைகீழாக திருப்பிப் போடும் நிகழ்­வுகள் சம­கா­லங்­களில் நடை­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புகள் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

புதிய தேர்தல் முறையில் தங்­க­ளது கட்­சிக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளதை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

மாகாண சபைத் தேர்­தலில் புதிய மாற்­றங்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கும் இணக்கம் தெரி­வித்­துள்ளார். தங்­க­ளது தோல்வி குறித்து தேசியக் கட்­சிகள் தங்­க­ளுக்குள் விரல் சுட்­டு­கின்­றனர்.

இந்­நி­லையில் ஆட்­சி மாற்றம் குறித்து ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மாறி மாறி பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி வரு­கின்­றனர்.

தேசிய அர­சி­யலில் பாரிய மாற்­றங்கள் நடை­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்கள் நில­வு­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்­கான ஒன்­று­ கூடல் நிகழ்வு நேற்று கட்சித் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் நடை­ பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு உரை­யாற்­றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது நேற்றுக் காலை ஜனா­தி­ப­தியை சந்­தித்த நாடா­ளு­ மன்றக் குழு­வினர் சூடு­பி­டித்­துள்ள சம­கால அர­சியல் கள­நி­லை­வரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் அபார வெற்றி பெற்­றுள்ள நிலையில், தேசிய அர­சி­யலில் ஆட்­சி­மாற்றம் குறித்து இதன்­போது பேசப்­பட்­டது.

எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மேற்­கொண்ட பேச்­சு­வார்த்­தை­களில் இணக்கம் காணப்­ப­ட­வில்லை.

புதிய தேர்தல் முறை­யினால் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த இடங்­களில் தங்­க­ளது கட்சி தோல்­வியை சந்­தித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். மாகாணசபைத் தேர்­த­லிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்­கல்கள் ஏற்­படும் என்­பதை ஜனா­தி­ப­திக்கு நான் தெளி­வு­ப­டுத்­தினேன்.

இதனை ஏற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி, மாகா­ண­சபைத் தேர்­தலில் விருப்பு வாக்­கு ­மு­றையை நீக்கி தேர்தல் சட்­டத்தில் புதிய திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வேண்டும் என்று தெரி­வித்தார்.

நாட்டின் தேசிய அர­சி­யலை தலை­ கீ­ழாக திருப்­பிப்­போடும் நிகழ்­வுகள் சம­கா­லங்­களில் நடை­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. இருப்­பினும் நல்­லாட்சியை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கான முஸ்­தீ­பு­க­ளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆத­ர­வ­ளிப்போம்.

மஹிந்த ராஜ­பக் ஷ அணி பெற்­றுள்ள வெற்றி தேசிய அர­சி­யலில் பாரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த நிலை­மைக்கு யார் காரணம் என்­பதை தேசியக் கட்­சிகள் தங்­க­ளுக்குள் மாறி மாறி விரல்­சுட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன.

சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களை விலை­பே­சு­கின்ற அள­வுக்கு நிலை­வரம் மாறி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி இதன்­போது கவலை தெரி­வித்தார். ஒரு ஜனா­தி­ப­தியே கவ­லைப்­ப­டு­கின்ற அள­வுக்கு அர­சியல் நிலைவரம் மாறி­வ­ரு­கின்­றது.

அர­சாங்கத்­துக்குள் நிலவும் முரண்­பா­டு­களை களைந்து, இணக்­கப்­பாட்­டுடன் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கண்டு நல்­லாட்­சியை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­கான வழி­வ­கை­களை நாம் செய்­ய­வேண்டும். இதன்­மூலம் இதன் பின்­பு­லத்­தி­லுள்ள சக்­தி­க­ளுக்கு தீனி போடாமல் பாது­காக்க முடியும்.

நாட­ளா­விய ரீதியில் 19 மாவட்­டங்­களில் போட்­டி­யிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 13 சபைகளில் ஆட்சி யமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் நடைபெற்று வருகின்றன. இதற்காக கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

(Visited 207 times, 1 visits today)

Post Author: metro