கொழுப்பும் மூளையும் : டாக்டர் ஏ.பீ. ஃபரூக் அப்துல்லா

எண்சாண் உட­லுக்கு சிரமே பிர­தானம் என்ற பழ­மொ­ழி­யா­கட்டும், கூட்­டத்தில் முக்­கி­ய­மா­ன­வரை"தல" என்று கூறு­வது "தீனா" படத்­திற்கு பிறகு இயல்­பா­கி­விட்­ட­தா­கட்டும் நமது உடலில் தலைக்கு என்று ஒரு தனி மரி­யாதை இருக்­கி­றது.

brain 1
நமது மூளையை கபாலம் எனும் மண்டை ஓட்­டினுள் வைத்து நமது உடல் பாது­காக்­கி­றது.
ஏன் சிரத்­திற்கு மட்டும் தனி கவ­னிப்பு?


நமது தலைக்குள் இருக்கும் முக்­கி­ய­மான உறுப்­புக்­காகத் தான் இத்­தனை மரி­யாதை. அது தான் மூளை. நமது உடல் ஒரு கம்ப்­யூட்டர் என்றால் மதர் போர்ட் மூளை தான்.


எஃகை வார்த்து சிலிக்கான் சேர்த்து வய­ரூட்டி உயி­ரூட்டி ஹார்­டிஸ்கில் நினை­வூட்டி நம் மூளையை இறைவன் படைக்­க­வில்லை.


நம் மூளை பிரத்தி­யே­க­மாக செய்­யப்­பட்ட கொழுப்பு உருண்டை. நம் மூளை 60 சத­வி­கிதம் கொழுப்­பினால் ஆனது தான்.


நமது மூளைக்கும் கீடோன்­க­ளுக்கும் இடை­யே­யான தொடர்பு அறுந்து போய் நூற்­றாண்­டுகள் ஆகின்­றன.
சுமார் பத்­தா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை மனிதன் உண­வாக உட்­கொண்­ட­து. ­பெ­ரும்­பாலும் கொழுப்­பு­ண­வைத்தான். கடந்த பத்­தா­யிரம் ஆண்­டு­க­ளாகத் தான் ஹோமோ சேபியன் எனும் ெமாடர்ன். விவ­சா­யத்தில் இறங்கி நதிக்­க­ரை­களில் நாக­ரிகங்­களை ஏற்­ப­டுத்தி வாழ்ந்து வரு­கிறான் .


2 மில்­லியன் ஆண்­டு­க­ளாக அவன் உண்டு வந்த உண­வு­களை மாற்றி மாவுச்­சத்தை அதிகம் உண்ணும் இன­மாக மாறினான். 10,000 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்­டர்­தாலிஸ் எனும் மனித இனத்­துக்கும் இன்று 2017 இல் வாழும் ஹோமோ சேபி­யன்­க­ளான நமக்கும் 99.7 சத­வி­கிதம் ஜீன்கள் ஒத்­துப்­போ­கின்­றன.


ஆனால், அவர்கள் உண்ட உணவு முறையில் இருந்து தலை­கீ­ழாக நாம் மாறி­விட்டோம்.
அதனால் தான் நமது ஜீன்கள் நம்மை கைவிட்டு விட்­டன. தன்­னெ­திர்ப்பு நோய்கள் (auto immune diseases) அதி­க­மா­கி­விட்­டன.


உண்­மையில் நியாண்­டர்­தால்கள் உணவு முறை எப்­படி இருந்­தது? அது நமது மூளைக்கு உகந்­த­தாக இருந்­ததா?
இன்­றைய கட்­டுரை அதைப்­பற்­றி­யது தான். கி.மு 22000 – பின் கற்­காலம் நியாண்­டர்­தால்­களின் யுகம். அவர்­களின் ஒருநாள் எப்­படி இருந்­தி­ருக்கும். விடி­யற்­காலை துயில் எழுந்து குகையை விட்டு வெளி­யே­றி, ஆண்கள் குழு­வாக வேட்­டைக்கு கிளம்­பி­வி­டுவர்.


நம்மை போன்று கட்­டாய டீ, காபிக்கு காத்­தி­ருக்­க­மாட்­டார்கள். வேட்டை என்­பது மிக நுட்­ப­மான அறி­வுத்­தி­றனை கொண்டு செய்ய வேண்­டிய பணி.ஐம்­பு­லன்­களும் சிறப்­பாக வேலை செய்தால் மட்­டுமே கிட்டும் வெற்றி.  


தொப்­பை­யின்றி அதிக உடற்­ப­ருமன் இல்­லாமல் கட்­டு­ட­லுடன் இருந்­தி­ருந்தால் மட்­டுமே பெரிய விலங்­கு­க­ளான யானை, காட்­டெ­ருமை போன்­ற­வற்­றுடன் சரிக்­குச்­சமம் நின்று ஜெயிக்க முடியும்.


அவர்­க­ளிடம் கத்­தியோ வாள்­களோ இன்­றைய நவீன மனி­த­னிடம் இருக்கும் துப்­பாக்­கி­களோ இருக்­க­வில்லை.  கையில் இருப்­பது கூர்­தீட்­டப்­பட்ட கற்­களால் ஆன ஈட்­டி, கடி­ன­மான பாறாங்­கற்கள் மட்­டுமே.


மூளை கூர்­மை­யாக வேலை செய்­யாமல் இருந்­தாலோ மூளையில் இருந்து செல்லும் கட்­ட­ளைகள் அவர்­க­ளது புலன்­களை கட்­டுக்குள் வைக்­காமல் இருந்­தி­ருந்­தாலோ அவர்­களால் அந்த காலக்­கட்­டத்தில் உயிர் வாழ்ந்­தி­ருக்க முடி­யுமா? வேட்­டையில் வெற்றி பெற்று, விலங்கை தூக்­கிக்­கொண்டு அவர்­க­ளது குகையை வந்­த­டைவர்.
அது­வரை குகையில் இருக்கும் பெண்கள் மெகா சீரி­யலா பார்த்­துக்­கொண்­டி­ருந்­தனர்?


அவர்­களும் வேட்­டை­யா­டப்­பட்ட விலங்கை உண்­ப­தற்கு ஏது­வாக செய்ய தேவை­யான சுள்­ளி­களை பொறுக்­கு­வது. விற­கு­களை வெட்­டு­வ­து, குழந்­தை­களை பரா­ம­ரிப்­ப­து, காட்டில் கிடைக்கும் உண்­ணத்­த­குந்த கிழங்கு வகை­களை சேக­ரித்தல் போன்ற வேலை­களில் பொழுதை கழிப்பர். மாலை வேளையில் விருந்து நடை­பெறும். இருப்­பதை பகிர்ந்து உண்பர்.


சூரியன் மெல்ல மறையத் தொடங்­கி­யதும் வேட்டை விலங்­குகள் தீண்­டாத வண்ணம் தங்­க­ளது குகைக்கு வெளியே தீயை மூட்டி வைத்­து­விட்­டு, உறங்கச் சென்­று­வி­டுவர்.

அவர்கள் உண்ட உணவில் மாமிசம் அதி­க­மா­கவும், பற­வை­களின் முட்­டைகள், மீன்கள், கிழங்­கு­கள் அந்­தந்த தட்­ப­வெட்ப நிலை­க­ளுக்கு ஏற்­ற­வாறு விளையும் பழங்கள், காய்­க­றிகள் இவை தான் இருந்­தன. வறட்சி சூழ்­நி­லையில் பட்­டினி தான். மணி­நே­ரக்­க­ணக்கில் பட்­டினி கிடப்­ப­தில்லை.

நாட்­க­ணக்­கில், வாரக்­க­ணக்கில் மாதக்­க­ணக்கில் பட்­டினி கிடந்து தான் தங்கள் இன்­னு­யிரை காத்து மனித இனத்­தையும் அழிவில் இருந்து காத்­தனர்.


அவர்­களை அழிவில் இருந்து காத்­தது எது?


நமது மூளை, அதற்கு 4 நிமி­டங்கள் தொடர்ந்து ஒக்­சி­ஜனை கொடுக்கும் இரத்தம் கிடைக்­க­வில்­லை­யென்றால் கோபித்­துக்­கொண்டு மீளாத் துயில் (coma) நிலைக்குச் சென்­று­விடும்.


அப்­ப­டிப்­பட்ட ஒரு சென்­சிடிவ் உறுப்பை வைத்­துக்­கொண்டு.. குளூ­கோசை மட்டும் நம்பி மனித இனம் வாழ்ந்­தி­ருந்­தால் ­எப்­படி பஞ்சம் பிழைத்து வாழ்ந்­தி­ருக்க முடியும்?


Fat-Brain-1நம்மை டைனோ­சர்­களைப் போல அழிந்து விடா­மல்­ மூளைச் சாவு அடைந்து விடாமல் காத்­தது இந்த கீடோன்கள் தான். ‘கீடோன்­க­ளுக்கே’ நாம் கட­மைப்­பட்­டுள்ளோம்.


எப்­படி கீடோன்கள் நம்மை அழிவில் இருந்து காத்­தன?


இப்­போது கேள்வி ஒன்று வரும்.


ஒவ்­வொரு உறுப்பும் பிரத்தி­யே­க­மாக இயங்க எரி­பொருள் வேண்டும்.  நம் மூளை இயங்க பிரத்தி­யே­க­மான எரி­பொ­ருள்,   குளூகோஸ் என்றே மருத்­துவ உலகம் நம்பி வந்­தது. வரு­கி­றது. அதற்கு பிறகு வருவோம்.


நாம் எந்த வேலையும் செய்­யாமல் இருக்கும் வேளை­யி­லும் கிட்­டத்­தட்ட நாம் உண்ணும் உணவில் கிடைக்கும் கலோ­ரி­களில் 25- – 30% மூளைக்கு மட்­டுமே செல­வா­கி­றது. மூளையின் சிந்­த­னைக்கு வேலை தரும் தொழில் செய்தால் இன்னும் அதி­க­மான கலோ­ரிகள் மூளைக்கு தேவைப்­ப­டு­கி­றது. மாவுச்­சத்தை பிர­தான உண­வாக உண்ணும் போது கிட்­டத்­தட்ட 130 கிராம் கார்­போ­ஹைட்ரேட்ஸ் மூளைக்கு தேவைப்­ப­டு­கி­றது.


இதெல்லாம் சரி தான்.மூளை குளூகோஸ் கொண்டு மட்டும் தான் இயங்­குவேன் என்று என்­றா­வது கூறி­யதா? இல்­லையே.


உண்­மையில் நமது மூளை குளூகோஸ் மற்றும் கீடோன்கள் இரண்­டைக்­கொண்டும் இயங்கும்.
எப்­படி இதை சோதிப்­பது?

விமா­னத்தில் செல்­கி­றீர்கள். திடீ­ரென விமா­னத்தில் தொழில்­நுட்பக் கோளாறு.

பரசூட் அணிந்து விமா­னத்தில் இருந்து ஒரு ஜம்ப் அடித்து நேரே ஒரு ஆள் அர­வ­மில்­லாத தீவில் தனி­யா­ளாக மாட்­டிக்­கொள்­கி­றீர்கள் என்று வைத்­துக்­கொள்வோம் .( ஒரு பேச்­சுக்கு தான்) முதல் மூன்று மணி நேரம் உங்கள் உடலில் உள்ள மிச்சம் மீதி க்ளூகோஸ் கொண்டு மூளை இயங்கும். இன்னும் மீட்பு படகு வர­வில்லை.


உங்­க­ளது கல்­லீ­ரலில் க்ளைகோஜென் எனும் ரிசர்வ் இருக்கும். நமது கல்­லீரல் அந்த க்ளைகோ­ஜனை உடைத்து குளூ­கோ­சாக மாற்றி மூளைக்கு தரும்.


இது ஒரு நான்கு மணி­நேரம் தாக்கு பிடிக்கும். இன்னும் நீங்கள் எதுவும் சாப்­பி­ட­வில்லை. மீட்­புக்கு ஆட்­களும் வர­வில்லை.


இப்­போது உங்கள் உடல் "starvation ketosis"  எனும் நிலைக்குச் செல்லும்.
இந்த நிலையில் உங்கள் உடலில் சேர்த்து வைத்­துள்ள கொழுப்பை கல்­லீரல் பீட்டா ஒக்­சி­டேஷன் மூலம் க்ளூகோ­நி­யோ­ஜெ­னசிஸ் மூலமும் கீடோன்­க­ளா­கவும் குளூகோ­சா­கவும் மாற்றி மூளையை இயங்க வைக்கும்.
மூளைக்கும் நமது பிற உறுப்­புக்கும் இடையில் ஒரு வேலி உண்டு. அதன் பெயர் brain – barrier.


நாம் உண்ணும் கொழுப்­பு­ணவில் உள்ள பெட்டி அசிட் அளவில் பெரி­யதாய் இருப்­பதால் மூளைக்குள் நுழைய முடி­யாது. ஆனால் கீடோன்கள் சர்வ சாதா­ர­ணமாய் மூளையை சென்று அடையும்.


ஆக மீட்பு படகு வரும் வரை உங்­களை மூளைச் சாவு வராமல் காப்­பது உங்கள் "கொழுப்பு" தான்.
இதே Ketosis ஐ நாம் உணவின் மூலம் அடைந்தால் அதன் பெயர் nutritional KETOSIS" கொழுப்­பு­ண­வை­யும் நல்ல தர­மிக்க புர­தச்­சத்து உண­வையும் (having all essential amino acids )  உண்டு மாவுச்­சத்தை குறைத்தால் நமது உடல் மூளைக்குத் தேவை­யான கீடோன்­க­ளையும் க்ளூகோ­சையும் தானே சமைத்­து­விடும்.


இதைக்­கொண்டு நம் மூளை சிறப்­பாக செயற்­படும். குளூ­கோஸை எரி­பொ­ரு­ளாக உப­யோ­கிக்­கை­யில், மூளைக்­கான எனர்ஜி ஏற்ற இறக்­கத்­து­ட­னேயே செல்லும். மேலும் குளூகோஸ் இரத்தத்தில் குறையும் போதும்  (hypoglycemia) அதிகமாகும் போதும் (HYPERGLYCEMIA)  மூளையால் திறம்பட வேலை செய்ய இயலாது.


இதனால் தான் பசியிலோ ஒரு ஃபுல் பிரியாணியை சாப்பிட்ட பிறகோ நம்மால் சரியாக வேலை செய்ய முடிவதில்லை.


(அடுத்த வாரம் தொடரும்)

Metro-news-health-24-02-2017-750

(Visited 649 times, 1 visits today)

Post Author: metro