உள்ளூராட்சி சபையை பிரதிநிதித்துவம் செய்யும் முதல் ஆதிவாசி பெண் உறுப்பினர் ஹிரோமலா – தெஹிஅத்தகண்டிய நகர சபைக்கு தெரிவு

(இரோஷா வேலு)

வர­லாற்றில் முதல்மு‍றை­யாக ஆதி­வாசி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டி­யுள்ளார்.

இவர் தெஹி­அத்­த­கண்­டிய நகர சபைக்­காக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் போட்­டி­யிட்டே வெற்றி பெற்­றுள்ளார்.

தெஹி­அத்­த­கண்­டிய பிர­தே­சத்தில் வசித்து வரும் டபிள்யூ. எம். ஹிரோ­மலா என்ற பெண்ணே 1,369 வாக்­கு­களைப் பெற்­றுள்ளார்.

இது குறித்து டபிள்யு.எம்.ஹி‍ரோ­மலா தெரி­விக்­கையில், வர­லாற்றில் முதல்முறை­யாக ஆதி­வா­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இத்­ தேர்­த லில் ‍போட்­டி­யிட்டேன்.

இந்­நி­லையில் மக்கள் எனக்கு வாக்­க­ளித்து வெற்­றி­யீட்ட உத­வி­யுள்­ளனர். அந்த வகையில் இது வர­லாற்று சம்­ப­வ­மாக பதி­வா­கி­யுள்­ளது.

எனக்கு வாக்­க­ளித்த அனைத்து மக்­க­ளுக்கும் நான் நன்றி கூற கட­மைப்­பட்­டுள்ளேன். அவர்­க­ளுக்­கான சேவை­யாற்ற நான் முன்­வ­ருவேன்.

அத­னுடன் ஆதி­வா­சி­களின் இன மற்றும் மத முன்­னேற்­றத்­துக்­காக நான் பணி­யாற்­றுவேன்.

ஆதி­வாசி மக்­களின் கல்வி மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திகள் குறித்து கவனம் செலுத்­த­வுள்ளேன். ஆதி­வாசி இளை­ஞர்­களின் முன்­னேற்­றத்­து்­காக செய­லாற்­ற­வுள்­ள­தாக தெரி­விக்கும் அவர் இதனைத் தொடர்ந்து நாடா­ளு­மன்ற தேர்­த­லிலும் போட்­டி­யிட்டு ஆதி­வா­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­படும் முதல் பெண்மணியாக வர வேண்டிய அடித்தளத்தை தற்போது உறுதியாக நிலைநாட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro