20 இலட்சத்து 52 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 2 பெண்கள் உட்பட மூவர் கைது

(இரோஷா வேலு)

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் 41, 040 சிக­ரெட்­டு­களை கடத்த முயற்­சித்த மூவரை சுங்கப் பிரிவு மற்றும் சுங்க போதைத்
­த­டுப்புப் பிரிவு அதி­கா­ரிகள் நேற்று கைது செய்­துள்­ளனர்.

வரக்­கா­பொல மற்றும் மீரி­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த 40 மற்றும் 31 வய­து­டைய இரண்டு பெண்­களும் 42 வய­து­டைய ஆண் ஒரு­வ­ருமே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

 

சந்­தேக நபர்கள் மூவரும் நேற்று காலை துபா­யி­லி­ருந்து இலங்கை வந்த விமா­னத்தில் கட்­டு­நா­யக்­கவை வந்­த­டைந்­தனர். இவ­ரி­க­ளி­ட­மி­ருந்து 20,52,000 ரூபா பெறு­ம­தி­யான 41,040 சிக­ரெட்­டுகள் கைப்­பற்­றப்­பட்­டன.

விமா­ன­நி­லை­யத்தில் சந்­தே­கத்­துக்­கி­ட­மாக இவர்கள் மூவரும் காணப்­பட்­ட­த­னை­ய­டுத்து சுங்கப் பிரிவு அதி­கா­ரி­களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

(Visited 18 times, 1 visits today)

Post Author: metro