தேசிய அரசாங்கத்தினால் நாம் தோல்வியடைந்து விட்டோம்: ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியை உருவாக்கத் தீர்மானம்; செயற்குழுவில் மாற்றங்கள்: கட்சி மறுசீரமைப்பையும் முன்னெடுப்போம் – ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள் தெரிவிப்பு

(எம்.எம்.மின்ஹாஜ்)

சுதந்­திரக் கட்­சி­யினர் பலர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­ய­வுள்­ளனர். ஆகவே ஐக்­கிய தேசியக் கட்சி தனி ஆட்­சியை உரு­வாக்க தீர்­மா­னித்­துள்ளது. இதற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக எடுக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான விசேட சந்­திப்பின் போது ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரி­யுள்­ளனர்.

இதன்­படி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கோரிக்­கைக்கு அமைய தனித்து ஆட்சி அமைக்கும் தீர்­மானம் இவ்­வா­ரத்­துக்குள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வை­ய­டுத்து அர­சாங்­கத்தின் நகர்வு தொடர்பில் ஆராய நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அலரி மாளி­கையில் சந்­தித்­தார்.

இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலர் கலந்து கொண்­டனர். இந்த சந்­திப்பின் பின்னர் அவர்கள் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­தனர்.

இந்த சந்­திப்பு தொடர்பில் நளின் பண்­டார, துஷார இந்­துனில், காவிந்து ஜய­வர்­தன, ஹெக்டர் அப்­பு­ஹாமி எம். பி க்கள் கூட்­டாக கருத்து தெரி­விக்கும் போது, “ஐக்­கிய தேசியக் கட்சி தனி ஆட்­சியை அமைப்­ப­தற்கு பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் தீர்­மா­னித்­துள்ளோம்.

தற்­போ­துதான் உண்­மை­யான வெற்­றியை நாம் அடைந்­துள்ளோம். மேலும் சுதந்­திரக் கட்­சி­யினர் பலர் எம்­முடன் இணை­ய­வுள்­ளனர். விரும்­பி­ய­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் வந்து இணை­யு­மாறு கோரு­கின்றோம்.

தற்­போது மக்கள் சிறந்த வாய்ப்பை வழங்­கி­யுள்­ளனர். இன்னும் ஒரு சில நாட்­களில் நிலைவரம் வெளி­வரும். ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரின் கோரிக்­கை­களை பிர­த­ம­ரிடம் முன்­வைத்­தனர்.

முதலில் ஆட்­சியை ஸ்திரப்­ப­டுத்­தி­யதன் பின்னர் கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம். தேசிய அர­சாங்­கத்­தினால் நாம் தோல்வியடைந்தோம்.

எமது கட்­சி­யி­னரே எமக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்­ளனர். ஆகவே இனி­மேலும் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம். ஜனா­தி­ப­தியின் கட்­சிக்கு எமக்கு நிபந்­தனை விதிக்க முடி­யாது. சுதந்­திரக் கட்சி பாரிய தோல்­வியை சந்­தித்­துள்­ளது” என்­றனர்.

மயந்த திஸா­நாயக்க மேலும் தெரி­விக்­கையில், “கிராம மட்­டத்தில் நாம் பாரிய மாற்­றங்­களை செய்­ய­வுள்ளோம். பிர­தமர் தனித் தீர்­மானம் எடுக்­காமல் அனை­வ­ரி­னதும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்று அதி­ர­டி­யான தீர்­மா­ன த்தை எடுக்­க­வுள்ளார். பிர­தமர் பதவி மாற்றம் ஏற்­ப­டாது. எமது செயற்­கு­ழுவில் பாரிய மாற்றங்­களைச் செய்து கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம்.

நாம் முன்­வைத்த கோரிக்­கைகள் அனைத்­தையும் பிர­தமர் செவி­ம­டுத்தார். பல பேச்­சு­வார்த்­தையின் பின்னர் இவ்­வா­ரத்­துக்குள் அதி­ர­டி­யான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என்றார்.”

இதே­வேளை, நேற்று முன்தினம் அமைச்­சர்­க­ளையும் ராஜாங்க அமைச்சர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் நேற்று நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் 5 மணிக்கும் கட்டம் கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியினரையும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களையும் அழைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

(Visited 85 times, 1 visits today)

Post Author: metro