இலஞ்சம் , ஊழல் மோசடி மற்றும் வீண் விர­யங்­க­ளுக்கு எதி­ரான விரி­வான மக்கள் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்!

(எம்.மனோ­சித்ரா)

இலஞ்சம், ஊழல் மோசடி மற்றும் வீண் விர­யங்­க­ளுக்கு எதி­ரான விரி­வான மக்கள் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அண்­மையில் வழங்­கப்­பட்­டி­ருந்த உறுதி மொழிக்­கேற்ப இந்­நி­கழ்ச்­சித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இது குறித்து வெளி­யி­டப்­பட்­டுள்ள ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, ஊழல் மோசடி, இலஞ்சம் மற்றும் வீண்­வி­ர­யங்­க­ளுக்கு எதி­ரான அர­சியல் மற்றும் சமூக கலா­சா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல், ஆட்சி முறையை வலுப்­ப­டுத்தல், சட்ட முறை­மை­யையும் சட்ட நிறு­வ­னங்­க­ளையும் முறைப்­ப­டுத்தல் உள்­ளிட்ட விட­யங்கள் இந்­நி­கழ்ச்சி திட்­டத்தின் கீழ் மேற்­கொள்­ளப்­படும்.

இதன் மூலம் சுபீட்­ச­மான புதி­யதோர் யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக் கூடி­ய­தாக இருக்கும். இலங்­கையின் தற்­போ­தைய சவால்கள் குறித்த தெளி­வுடன் நவீன தேச­மாக எழுந்­தி­ருப்­ப­தற்கு தேவை­யான சக்­தியை வழங்கி ஊழல் மோச­டி­யற்ற இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான ஜனா­தி­ப­தியின் அர்ப்­ப­ணிப்பு இதன் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவை அனைத்­தையும் நாட்டில் இருந்து ஒழித்து நாட்டை சுபீட்­ச­மா­ன­தொரு தேச­மாக கட்­டி­யெ­ழுப்பும் மக்­களின் பாது­காப்பின் ஒரு தூணாக இந் நிகழ்ச்சித் திட்டம் அமையும். அதில் அனை­ வ­ரையும் ஒன்­றி­ணையு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

(Visited 23 times, 1 visits today)

Post Author: metro