1990 : பெங்­களூர் விமான விபத்தில் 92 பேர் பலி

வரலாற்றில் இன்று

பெப்ரவரி – 14

 

273 : ரோமில் பாதி­ரியார் புனித வலன்டைன் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்டார். அவரின் நினை­வாக வலன்டைன் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. (அவர் கொல்­லப்­பட்ட வருடம் 269, மற்றும் 270 எனவும் கூறப்­ப­டு­கி­றது)

1421 : நெதர்­லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பர­வி­யதில் 10,000 பேர் வரையில் உயி­ரி­ழந்­தனர்.

1477 : இங்­கி­லாந்தில் அச்­சி­யந்­தி­ர­சா­லையில் அச்­சி­டப்­பட்ட முத­லா­வது நூலான “Dictes or Sayengis of the Philosophres” வில்­லியம் கக்ஸ்டன் என்­ப­வரால் வெளி­யி­டப்­பட்­டது.

1493 : கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்­ற­ழைக்­கப்­படும் நாட்டை முதன்­மு­றை­யாகக் கண்­ணுற்றார்.

1803 : ஹெயிட்டி புரட்­சியின் கடைசிப் பெரும் போர் இடம்­பெற்­றது. இது ஹெயிட்டி குடி­ய­ரசு என்ற மேற்கு அரைக்­கோ­ளத்தின் முத­லா­வது கறுப்­பினக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட வழி­வ­குத்­தது.

1863 : டென்­மார்க்கின் ஒன்­பதாம் கிறிஸ்­டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்­மார்க்­குக்குச் சொந்தம் என அறி­விக்கும் சட்­ட­மூ­லத்­துக்கு ஒப்­ப­மிட்டார். இது 1864 இல் ஜேர்­மன்-­ டென்மார்க் போர் ஏற்­பட வழி­வ­குத்­தது.

1883 : கன­டாவும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஒரே நேர எல்­லை­களை வகுத்துக் கொண்­டன.

1903 : பனாமா கால்­வாய்க்கு தனிப்­பட்ட உரி­மையை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு வழங்கும் உடன்­பாடு பனா­மா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1909 : நிக்­க­ரா­கு­வாவில் இரண்டு அமெ­ரிக்­கர்கள் உட்­பட 500 புரட்­சி­யா­ளர்கள் அர­சுப்­ப­டை­யினால் கொல்­லப்­பட்­டதை அடுத்து ஐக்­கிய அமெ­ரிக்கா இரண்டு போர்க்­கப்­பல்­களை அந்­நாட்­டுக்கு அனுப்­பி­யது.

1918 : லத்­வியா ரஷ்­யா­விடம் இருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக அறி­வித்­தது.

1924 : ஐ.பி.எம். நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1926 : ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்­கப்­பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.

1943 : உக்­ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த 6,000 யூதர்கள் நாஸிப் படை­க­ளினால் கொல்­லப்­பட்­டனர்.

1947 : நியூ­ஸி­லாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்­தகத் தொகுதி ஒன்றில் இடம்­பெற்ற தீயில் 41 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1978 : கயா­னாவில் ஜிம் ஜோன்ஸ் என்­ப­வரின் மக்கள் கோயிலில் இடம்­பெற்ற கொலை மற்றும் தற்­கொலை நிகழ்­வு­களில் 270 குழந்­தைகள் உட்­பட 918 பேர் இறந்­தனர்.

1979 : ஆப்­கா­னிஸ்­தானில் அமெரிக்கத் தூதுவர் அடோல் டப், ஆயுதக் குழு­வொன்­றினால் கடத்தி கொல்­லப்­பட்டார்.

1987 : லண்­டனில் கிங் க்ரொஸ் சுரங்க ரயில் நிலை­யத்தில் இடம்­பெற்ற தீயில் 31 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989 : ஈரா­னிய ஆன்­மிகத் தலைவர் கொமெய்­னி­யினால் சல்மான் ருஷ்­டிக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1990 : இந்­தி­யாவின் பெங்­களூர் நகரில் இன்­டியன் எயார்லைன்ஸ் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் 92 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2004 : மொஸ்­கோவில் நீரியல் பூங்­கா­வொன்றின் கூரை இடிந்­ததால் 25 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2005 : லெப­னானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி, பெய்ரூத் நகரில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

2005 : உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வு இணையத்தளமான யூ ரியூப் ஆரம்பிக்கப்பட்டது.

2011 : பஹ்ரெய்னில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro