திருமணம் செய்யும் காதலர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்க அமெரிக்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடு

அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நகர விமான நிலை­ய­மா­னது காத­லர்­க­ளுக்கு விரை­வாக திரு­மணச் சான்­றி­தழ்­களை விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

இன்று கொண்­டா­டப்­படும் காதலர் தினத்தை முன்­னிட்டு லாஸ் வேகாஸ் விமான நிலையம் இந்த அறி­விப்பை விடுத்­துள்­ளது.

கேளிக்கை விடு­தி­க­ளுக்குப் பிர­சித்தி பெற்ற லாஸ் வேகாஸ் நக­ரத்தில் திரு­மண சான்­றி­தழ்­களைப் பெறு­வது இல­கு­வா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­ற­து. இதனால், உலகின் திரு­மணத் தலை ­ந­கரம் என்று லாஸ் வேகாஸ் நகரம் வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், லாஸ் வேகாஸில் திரு­ம­ணங்­களைப் பதிவு செய்யும் கிளார்க் கவுன்ரி நிர்­வா­க­மா­னது விமான நிலை­யத்தில் புதி­தாக திரு­மணப் பதிவு அலு­வ­ல­க­மொன்றை திறந்­துள்­ளது.

இவ்­வி­மான நிலை­யத்­துக்கு வரும் காத­லர்கள் அங்­கேயே தமது திரு­ம­ணத்தை உத்­தி­யோ­கபூர்வமாக பதிவு செய்­து­கொண்டு விரை­வாக சான்­றி­தழ்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 10 ஆம் திகதி திறக்­கப்­பட்ட இந்த விசேட திரு­மணப் பதிவு அலு­வ­ல­கத்தில் எதிர்­வரும் 17 ஆம் திக­தி­வரை இச்­சேவை தொடரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

லாஸ்­வேகாஸ் விமான நிலைய திரு­மணப் பதிவு அலு­வ­ல­கத்தில் திரு­மணம் செய்­து­கொண்ட, டல்லாஸ் நகரைச் சேர்ந்த ஸ்டெஃபானி என்­பவர் இது குறித்து கூறு­கையில், விமான நிலையத்தில் இவ்­வா­றான திரு­மணப் பதிவு அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டமை சிறந்த விடயம். இல்­லா­விட்டால் விமான நிலை­யத்தில் வந்திறங்கி, பின்னர் கிளார்க் கவுன்ரி திருமணப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்றார்.

(Visited 11 times, 1 visits today)

Post Author: metro