காத்தான்குடி நல்லாட்சி அலுவலகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்! என் மீது பழி சுமத்துவதற்கான செயலாக இருக்கலாமென சந்தேகிக்கிறேன் – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

(காங்கேயனோடை நிருபர்)

அமை­தியை சீர் குலைக்கும் விட­யங்­களில் எவரும் ஈடு­படக் கூடாது என இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார். நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் காத்­தான்­கு­டி­யி­லுள்ள பிராந்­திய அலு­வ­ல­கத்தின் மீது நடத்­தப்­பட்ட குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், “நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் காத்­தான்­குடி காரி­யா­ல­யத்­துக்கு குண்டு வீசப்­பட்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது.

உட­ன­டி­யாக நான் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரியை தொடர்பு கொண்டு அச் சம்­பவம் தொடர்பில் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுத்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறும் அரு­கி­லுள்ள கண்­கா­ணிப்பு கெம­ராக்­களை ஆராய்ந்து அடை­யாளம் காண முடி­யு­மாக இருந்தால் இத­னோடு சம்­பந்­தப்­பட்ட வர்­களை அடை­யாளம் கண்டு உட­ன­டி­யாக அவர்­களை கைது செய்­யு­மாறும் வேண்­டுகோள் விடுத்தேன்.

மேலும் பொலி­ஸாரின் தக­வலின் படி கடந்த வாரமும் காத்­தான்­கு­டியில் இவ்­வா­றான குண்டு வெடிப்பு சம்­பவம் ஒன்று நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் ஆத­ர­வாளர் ஒரு­வரின் வீட்­டிலும் இடம்­பெற்­றி­ருந்­தது.

இச்­சம்­ப­வத்தின் போது வெடித்த குண்டு வெளி­யி­லி­ருந்து வீசப்­ப­ட­வில்லை என்றும் வேண்­டு­மென்றே வைக்­கப்­பட்­ட­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­த­தாக அறி­கிறேன். இந்த அடிப்­ப­டையில் அதே வகையான முறை­யிலே தான் இக்­குண்டு வெடிப்பு சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக அறி­கின்றேன்.

ஆகவே, இது அவர்­க­ளுக்­குள்­ளேயே திட்­ட­மிட்டு என் மீது பழி சுமத்­து­வ­தற்­காக அல்­லது எங்கள் மீது வேறு ஏதா­வது பிரச்­சி­னை­களை உண்­டு­ பண்­ணு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் கூட எங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

எனவே இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
ஆகவே குறிப்பாக இந்த சம்பவங் களில் எக்காரணம் கொண்டும் எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் ஈடுபடவில்லை என்பதை மிக தெளி வாக சொல்லிவைக்க விரும்புகின் றேன்” என்றும் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

Post Author: metro