தேர்தலில் தேசியக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றி பெறலாம் என்ற பலரின் கனவு இன்று பகல் கனவாகி விட்டது! – மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன்

(தல­வாக்­கலை பி.கேதீஸ்)

“இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இந்­திய வம்­சா­வளி மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுத்த பெருமை இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸுக்கு மட்­டுமே உண்டு. மக்­களை தூண்­டி­விட்டு காலத்தை வீண­டிக்­காமல் அர­சியல் சாணக்­கி­யத்தின் மூலம் பல சாத­னை­களை புரிந்து மலை­யக சமூ­கத்தை தலை­நி­மிர வைத்­தவர் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளர் ­ஆ­று­முகன் தொண்­டமான்” என மத்­திய மாகாண விவ­சாய மற்றும் இந்து கலா­சார அமைச்சர் மரு­த­பாண்டி ரமேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊடக சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், “மலை­யக மக்கள் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மீதும் எமது பொதுச் செய­லாளர் ஆறு­முகன் தொண்­டமான் மீதும் வைத்­துள்ள நம்­பிக்­கையை நடந்து முடிந்த உள்ளூ­ராட்சி சபைத் தேர்தல் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

மலை­ய­கத்தில் தற்­போது தம்மை ஏக பிர­தி­நி­தி­க­ளாக நினைத்து கற்­ப­னை­யில் ­கா­லத்தை வீண­டிக்கும் மலை­யக அமைச்­சர்கள் உள்­ளூராட்சி மன்றத் தேர்­த­லில் ­தே­சியக் கட்­சி­களின் முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்­டனர். ஆனால் அந்தக் கனவு பகல் கன­வாக மாறி­விட்­டது.

நடந்து முடிந்த இத்­தேர்தல் மூலம் கிராம மட்­டத்தில் மக்­க­ளாட்­சியை மலரச் செய்ய வேண்டும். உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மக்­களின் அன்­றாட மற்றும் அத்­தி­யா­வ­சிய பிரச்­சி­னை­களை கையாளும் நிறு­வ­னங்­க­ளாக காணப்­ப­டு­வதால் பிரச்­சி­னை­களின் தீர்­வுக்கு மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­களின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­ன­தாகும்.  எமது மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு இணங்க அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தயாராக இருக்கின்றது.

(Visited 11 times, 1 visits today)

Post Author: metro