கட்டடம் இடிந்ததால் 7 பேர் பலி; கிராண்ட்பாஸில் சம்பவம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கொழும்பு கிராண்ட்­பாஸில் நேற்று கட்­டடம் ஒன்று இடிந்து வீழ்ந்­ததில் ஏழு பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், இருவர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

கிராண்ட்பாஸின் பிரிடோ பபா­புள்ளே வீதியில் அமைந்­துள்ள தேயி­லைதூள் களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பழை­மை­யான கட்­டட சுவர் நேற்று பிற்­பகல் 3.30 மணி­ய­ளவில் திடீ­ரென இடிந்து வீழ்ந்­தது. இதன்­போது, இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­குண்டு இருவர் ஸ்தலத்­தி­லேயே பலி­யா­ன­துடன் மேலும் 7 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அம்­பி­யூலன்ஸ் மூலம் அழைத்­துச்­செல்­லப்­பட்­டனர்.


இவர்­களில் ஐவர் சிகிச்சைப் பல­னின்றி உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை ஏழாக அதி­க­ரித்­தது. உயி­ரி­ழந்­த­வர்­களில் 4 ஆண்­களும், 3 பெண்­களும் அடங்­கு­வ­தா­கவும் இவர்கள் அனை­வரும் குறித்த தேயிலைக் களஞ்­சி­ய­சா­லையில் பணி­யாற்றி வந்­த­வர்கள் என்றும் பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.


சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்­று­வரும் ஏனைய இரு­வரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் திடீர் விபத்துப் பிரிவு பணிப்­பாளர் தெரி­வித்தார்.


இச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, இடி­பா­டு­களில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்­ப­தற்­காக சுமார் 8 தீய­ணைப்பு வாக­னங்கள் சம்­பவ இடத்­துக்கு அனுப்­பப்­பட்­ட­துடன், தீய­ணைப்புப் படை­யி­னரின் உத­வி­யுடன் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­குண்­டி­ருந்­த­வர்கள் மீட்­கப்­பட்டு அம்­பி­யூ­லன்ஸ்­களின் மூலம் உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டனர். அத்­துடன் இடி­பா­டு­களில் மேலும் சிலர் சிக்­குண்­டுள்­ள­னரா எனக் கண்­ட­றியும் பொருட்டு தொடர்ந்தும் தீய­ணைப்புப் படை­யினர் மற்றும் பொலிஸார் தேடுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­துடன் பொது­மக்­களும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­தனர்.


சம்­ப­வத்­தை­ய­டுத்து பெரு­ம­ள­வான அம்­பி­யூ­லன்ஸ்கள் சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­வர்­களை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடு­பட்­ட­மை­யி­னாலும் சம்­பவ இடத்தைப் பார்ப்­ப­தற்கு பலர் சம்­பவ இடத்­துக்கு வந்­த­மை­யி­னாலும் சம்­பவ இடத்தை அண்­டிய வீதிகள் பல­வற்றில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து அவ்வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட்ட சாரதிகளை மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலி ஸார் அறிவித்தல் விடுத்தனர். இச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro