குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் பாதிப்பு!

ஹட்டன் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட டிக்­கோயா மணிக்­க­வத்தை தோட்­ட­ப­கு­தியில் இன்று கொழுந்து பறித்துக் கொண்­டி­ருந்த 12 பேர் குளவி கொட்­டுக்கு இலக்­காகி டிக்­கோயா மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர் . பாதிக்­கப்­பட்ட அனை­வரும் பெண் தொழி­லா­ளர்­க­ளாவர்.

இவர்கள் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்­டி­ருந்த போது மரம் ஒன்­றி­லி­ருந்த குளவிக் கலைந்து கொட்­டி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக டிக்­கோயா கிளங் கன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

(Visited 14 times, 1 visits today)

Post Author: metro