2013 : ரஷ்­யாவில் விண்கல் வெடித்­ததால் 1500 பேர் காயம்

வரலாற்றில் இன்று….

பெப்ரவரி – 15

 

கி.மு 399 : கிரேக்க தத்­து­வ­ஞானி சோக்­கி­ரட்­டீ­ஸுக்கு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

590 : பார­சீ­கத்தின் மன்­ன­னாக இரண்டாம் கொஸ்­ராவு முடி சூடினார்.

1637 : ரோம் பேர­ரசின் மன்­ன­ராக மூன்றாம் பேர்­டினண்ட் முடி சூடினார்.

1898 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் கடற்­படைக் கப்பல் யூ.எஸ்.எஸ். மெய்ன், கியூ­பாவில் ஹவானா துறை­மு­கத்தில் வெடித்து மூழ்­கி­யதில் 260 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர். இந்­நி­கழ்­வை­ய­டுத்து ஸ்பெயி­னுக்கு எதி­ராக அமெ­ரிக்கா போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1942 : இரண்டாம் உலகப் போர்: சிங்­கப்பூர் ஜப்­பா­னிடம் வீழ்ந்­தது. இந்­திய, ஐக்­கிய இராச்­சியம் மற்றும் அவுஸ்­தி­ரே­லியா நாடு­களைச் சேர்ந்த சுமார் 80,000 படை­யினர் போர்க் கைதி­க­ளாக்­கப்­பட்­டனர்.

1946 : ENIAC எனும் முதல் தலை­முறைக் கணினி, அமெ­ரிக்­காவின் பெல்­சில்­வே­னியா பல்க­லைக்­க­ழ­கத்­தினால் அறி­மு­க­மா­னது.

1950 : சோவியத் ஒன்­றியம், மக்கள் சீனக் குடி­ய­ரசு ஆகி­யன பாது­காப்பு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.

1961 : பெல்­ஜி­யத்தில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த 73 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1970 : டொமி­னிக்கன் குடி­ய­ரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்­கோவில் கடலில் மூழ்­கி­யதில் 102 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989 : ஒன்­பது ஆண்டுகால ஆக்­கி­ர­மிப்­புக்குப் பின் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அனைத்து சோவியத் படை­களும் வெளி­யே­றி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டது.

1996 : சீனாவின் இண்­டெல்சாட் செய்மதி ஒன்று ஏவி­ய­வு­ட­னேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்­ததில் பலர் கொல்­லப்­பட்­டனர்.

1999 : குர்­திஸ்தான் உழைப்­பாளர் கட்சி எனும் அமைப்பின் அப்­துல்லா ஓக்­கலன் துருக்­கிய இர­க­சியப் படை­க­ளினால் கென்­யாவில் வைத்து கைது செய்­யப்­பட்டார்.

2013 : ரஷ்ய வான் பரப்பில் விண்கல் ஒன்று வெடித்துச் சிதறியதால் கட்டடங்கள் அதிர்ந்து ஜன்னல்கள் உடைந்தன. இதனால் சுமார் 1500 பேர் காயமடைந்தனரென அறிவிக்கப்பட்டது.

(Visited 31 times, 1 visits today)

Post Author: metro