விப­ரீ­த­மான பாலியல் விளை­யாட்­டின்­போது இறந்த காத­லனின் சட­லத்தை துண்­டு­க­ளாக வெட்­டிய யுவதி

விப­ரீ­த­மான பாலியல் விளை­யாட்­டின்­போது இறந்த தனது காத­லனின் உடலை துண்டுத் துண்­டாக வெட்டி மறைத்து வைத்­த­தாக ரஷ்ய யுவதி ஒருவர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

யுவதி ஒரு மாண­வி­யாவார். ரஷ்­யாவின் மேற்குப் பிராந்­திய நக­ரான ஒரியோலைச் சேர்ந்­தவர்.

இவர் 24 வய­தான தனது காதலர் திமித்ரி சின்­கே­விக்கை கொலை செய்த குற்­றச்­சாட்டில் ரஷ்ய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

ஆனால், திமித்­ரியை தான் கொலை செய்­ய­வில்லை என அனஷ்­டே­ஷியா தெரி­வித்­துள்ளார்.

பாலியல் விளை­யாட்­டொன்றில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அவ்­வி­ளை­யாட்டு விப­ரீ­த­மாகி, திமித்ரி இறந்தார் எனவும் அவரைக் கொன்­ற­தாக தன் மீது குற்றம் சுமத்­தப்­படக் கூடும் என்­பதால் அவரின் சட­லத்தை கத்­தியால் வெட்டி மறைக்க முயன்­ற­தா­கவும் அனஸ்­டே­ஷியா வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.

அனஸ்­டே­ஷி­யாவின் சகோ­தரி அவ்­வீட்­டுக்கு வந்­த­போது மேற்­படி சட­லத்தை கண்­டு­பி­டித்தார்.

உயி­ரி­ழந்த திமித்ரி சின்­கேவிக் ரஷ்ய பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றியதுடன் பின்னர் இராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.

(Visited 623 times, 1 visits today)

Post Author: metro