டொனால்ட் ட்ரம்புடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படும் பாலியல் பட நடிகைக்கு 2 கோடி ரூபா வழங்கியதை டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணி ஒப்புக்கொண்டார் – தனது சொந்தப் பணத்தையே கொடுத்ததாகக் கூறுகிறார்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், 2006 ஆம் ஆண்டு தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டார் என சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் செவ்­வி­ய­ளித்த பாலியல் பட நடி­கை­யான ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கு 130,000 டொலர் (சுமார் 2 கோடி ரூபா) பணத்தை தான் வழங்­கி­ய­தாக டொனால்ட் ட்ரம்ப்பின் சட்­டத்­த­ரணி ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம், நிதி சேக­ரிப்­புக்­கான கோல்வ் சுற்­றுப்­போட்­டி­யொன்றின் பின்னர், நெவேடா மாநி­லத்­தி­லுள்ள ஹோட்டல் அறை­யொன்றில் டொனால்ட் ட்ரம்­புடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக மேற்­படி செவ்­வியில் ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரி­வித்­தி­ருந்தார்.

38 வய­தான ஸ்டோர்மி டேனி­யல்ஸின் உண்­மை­யான பெயர் ஸ்டெஃபனி கிளிஃபர்ட். Touch (டச்) எனும் சஞ்­சி­கைக்கு மேற்­படி செவ்­வியை ஸ்டோர்மி டேனியல்ஸ் 2011 ஆம் ஆண்டு அளித்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அப்­போது அவர் கோடீஸ்­வர வர்த்­தகர், விளை­யாட்டு ஊக்­கு­விப்­பாளர், அழ­கு­ராணிப் போட்­டி­களை நடத்தும் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் என்றே டொனால்ட் ட்ரம்ப் பிர­ப­ல­மா­கி­யி­ருந்தார்.

ஸ்டோர்மி டேனியல்ஸ் தனக்கு அளித்த செவ்­வியை மேற்­படி சஞ்­சிகை வெளி­யி­டா­ம­லேயே வைத்­தி­ருந்­தது. ஆனால், கடந்த மாதம் 18 ஆம் திகதி அச்­சஞ்­சிகை மேற்­படி செவ்­வியை வெளி­யிட்­டது.

இச் ­செவ்வி வெளி­யா­­வ­தற்கு 6 தினங்­க­ளுக்கு முன்னர், ஜன­வரி 12 ஆம் திகதி அமெ­ரிக்­காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்­தி­ரி­கை­யா­னது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்டோர்மி டேனியல் தொடர்­பாக மற்­றொரு பர­ப­ரப்புச் செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தது.

டொனால்ட் ட்ரம்­புக்கும் ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கும் இடையில் நில­விய திரு­ம­ணத்­துக்குப் புற­மான பாலி யல் உறவு விவ­காரம் தொடர்­பாக எதுவும் பேசாமல் இருப்­ப­தற்­காக கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சாரக் காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் தரப்­பினால் 130,000 அமெ­ரிக்க டொலர் கள் (சுமார் 2 கோடி ரூபா) வழங்­கப்­பட்­டது என அச்­செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டது.

டொனால்ட் ட்ரம்பின் பிரத்­தி­யேக சட்­டத்­த­ரணி மைக்கல் கோஹென், இதற்­காக தனியார் நிறு­வ­ன­மொ ன்றை ஸ்தாபித்து, மேற்­படி பணத்தை ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கு வழங்­கி­ய­தாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரி­வித்­தி­ருந்­தது.

டொனால்ட் ட்ரம்பின் பிரத்­தி­யேக சட்­டத்­த­ரணி மைக்கல் கோஹென், இதற்­காக தனியார் நிறு­வ­ன­மொ ன்றை ஸ்தாபித்து, மேற்­படி பணத்தை ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கு வழங்­கி­ய­தாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரி­வித்­தி­ருந்­தது.

அதன் பின்­னரே டச் சஞ்­சிகை, 2011 ஆம் ஆண்டு ஸ்டோர்மி டேனியல்ஸ் அளித்த செவ்­வியை வெளி­யிட்­டது.

டொனால்ட் ட்ரம்­புக்கும் ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கும் இடையில் பாலி யல் தொடர்­புகள் ஆரம்­ப­மா­ன­தாகக் கூறப்­படும் காலத்தில் டொனா ல்ட் ட்ரம்பின் மனைவி மெல­னியா ட்ரம்ப் 4 மாத குழந்­தை­யாக இருந்த மகன் பெரோன் ட்ரம்பை பரா­ம­ரிப்­பதில் தீவிர கவனம் செலுத்திக் கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில், ட்ரம்­புக்கும் ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கும் இடை­யி­லான பாலியல் உறவு குறி த்து அறிந்­த­வுடன் மெல­னியா ட்ரம்ப் விவா­க­ரத்­துக்கு விண்­ணப்­பிப்­பாரா எனவும் அச்­சஞ்­சிகை கேள்வி எழுப்­பி­யி­ருந்­தது.

ஆனால், பாலியல் உறவு மற்றும் பணம் வழங்­கப்­பட்ட விவ­கா­ரத்தை டொனால்ட் ட்ரம்ப் தரப்பும் ஸ்டோர்மி டேனியல்ஸ் தரப்பும் நிரா­க­ரித்­தி­ருந்­தன.

டொனால்ட் ட்ரம்­பிடம் தான் பணம் பெற்­ற­தாக வெளி­யான செய்தி பொய்­யா­னது என ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரி­வித்­துள்ளார். தானும் டொனால்ட் ட்ரம்பும் ஒரு சில தட­வைகள் பொது இடங்­களில் இணைந்து தோன்­றி­யமை மாத்­தி­ரமே ட்ரம்­பு­ட­னான தனது செயற்­பா­டு எனவும், அவ்­வே­ளையில் டொனால்ட் ட்ரம்ப் அங்­கி­ருந்த அனை­வ­ரு­டனும் தொழில்சார் தன்­மை­யு­டனும் ஜென்டில் மேனா­கவும் நடந்­து­கொண்­ட­தா­கவும் ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார காலத்தில் ஸ்டோர்மி டேனியல்­ஸுக்கு தான் 130,000 டொலர்­களை (சுமார் 2 கோடி ரூபா) வழங்­கி­ய­தாக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் பிரத்­தி­யேக சட்­டத்­த­ரணி மைக்கல் கோஹென், நியூ யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

எனினும், இப்­ப­ணத்தை தனது சொந்த நிதி­யி­லி­ருந்தே செலுத்­தி­ய­தா­கவும், இப்­ப­ணத்தை டொனால்ட் டரம்ப்பின், ட்ரம்ப் ஓர்­க­னை­சேஷன் அல்­லது ட்ரம்பின் தேர்தல் பிர­சாரக் குழு தனக்கு மீளக் கொடுக்­க­வில்லை எனவும் மைக்கல் கோஹென் தெரி­வித்­துள்ளார். இப்­பணம் எதற்­காக ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கு வழங்­கப்­பட்­டது என மைக்கல் கோஹென் தெரி­விக்­க­வில்லை.

இதே­வேளை, எவ்­வா­றெ­னினும், திரு­ம­ணத்­துக்குப் புறம்­பான பாலியல் உறவை மறைப்­ப­தற்­காக செக்ஸ் திரைப்­பட நடி­கைக்கு ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சாரக் காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் பணம் வழங்­கினார் எனக் கூறப்­ப­டு­வது அமெ­ரிக்க அர­சி­யலில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2016 ஒக்­டோபர் 17 ஆம் திக­தியே இப்­பணம் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்படுகிறது. அதன்பின் சுமார் இரு வாரங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை அதிர்ச்சிகரமாக டொனால்ட் ட்ரம்ப் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்­நி­லையில், மேற்­படி பணம் வழங்கல் குற்­றச்­சாட்டு தொடர்­பாக அமெ­ரிக்க நீதித்­துறை திணைக்­க­ளத்­தி­டமும், அமெ­ரிக்க தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வி­டமும் அர­சியல் கண்­கா­ணிப்பு அமைப்­பொன்று முறைப்­பாடு செய்துள் ளது.

(Visited 164 times, 1 visits today)

Post Author: metro