200 அடி பள்ளத்திலுள்ள மேல்கொத்மலை ஆக்ரோயா ஆற்றில் கார் வீழ்ந்து இளைஞனும் யுவதியும் உயிரிழப்பு- கம்பஹாவைச் சேர்ந்த யுவதி அடையாளம் காணப்பட்டார்

(க.கிஷாந்தன்)

லிந்­துலை மற்றும் தல­வாக்­கலை ஆகிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹட்டன் – நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் லிந்­துலை பெயார்வெல் பகு­தியில் நேற்று மாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்­ளத்தில் மேல்­கொத்­மலை நீர்த்­தேக்­கத்­திற்கு நீர்­வ­ழங்கும் ஆக்­ரோயா ஆற்றில் பாய்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யதில் அதில் பயணஞ் செய்த இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.


இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒருவர் கம்­பஹா பகு­தியைச் சேர்ந்த பியூ­மிசாந்த் பிர­சாதி பெரேரா (24) என்ற யுவ­தி­யாவார். உயி­ரி­ழந்த இளைஞர் தொடர்பில் இது­வரை தக­வல்கள் வெளி­யா­க­வில்லை.


நுவ­ரெ­லியா பகு­தி­யி­லி­ருந்து கம்­பஹா பகு­தியை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த காரே நேற்று மாலை 3 மணி­ய­ளவில் இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. காரில் இளை­ஞரும் யுவ­தியும் மட்டுமே பய­ணித்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.


விபத்­துக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட ­வில்லை. உயி­ரி­ழந்த இரு­வரின் சட­லங்­களும் லிந்­துலை வைத்­தி­ய­சா­லையின் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.


இச்­சம்­பவம் குறித்து மேல­திக விசா­ர­ணை­களை லிந்­துலை மற்றும் தல­வாக்­கலை பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

(Visited 126 times, 1 visits today)

Post Author: metro