ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் மண்­டி­யி­டப்­பட்­ட­தாக கூறப்­படும் அதிபர் உள்­ளிட்டோர் பய­ணித்த வேன் பள்­ளத்தில் வீழ்ந்து விபத்து- இருபெண்கள் உட்­பட நால்வர் காயம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் மண்­டி­யி­டப்­பட்­ட­தாகக் கூறப்­படும் அதிபர் உள்­ளிட்ட குழு­வினர் பய­ணித்த வேன் ஒன்று பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் நால்வர் காய­ம­டைந்­துள்­ள­தாக சம­ன­ல­வெவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.


ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் அதிபர் ஒருவர் மண்­டி­யி­டப்­பட்ட சம்­பவம் தொடர்­பான சாட்­சிய விசா­ர­ணை­க­ளுக்­காக பாதிக்­கப்­பட்ட அதிபர் கடந்த 15 ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­துக்கு மேலும் 6 பேருடன் சென்­றுள்ளார்.

பிர­தான சாட்­சி­யா­ள­ரான அதி­பரை ராகமை­யி­லுள்ள அவ­ரது உற­வினர் ஒரு­வரின் வீட்டில் இறக்கி விட்­டதன் பின்னர் அவ­ருடன் கொழும்­புக்கு வந்­தி­ருந்த 6 பேரும் அன்­றி­ரவு மீண்டும் வேனில் பதுளை நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்தபோது அந்த வேன் பதுளை – கொழும்பு பிர­தான வீதியில் ஹல்பே பிர­தே­சத்தில் அமைந்­துள்ள சுர­த­லீ­எல நீர்­வீழ்ச்­சியின் அடி­வா­ரத்தில் சுமார் 30 அடி பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.


சம்­பவ இடத்­துக்கு சம­ன­ல­வெவ பொலிஸார் செல்­வ­தற்­கி­டையில், விபத்தில் காய­ம­டைந்­த­வர்­களில் நால்வர் உட­ன­டி­யாக ஹல்­து­முல்லை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். காய­ம­டைந்த நால்­வரில் இரு­பெண்கள் அடங்­கு­வ­தா­கவும் அவர்­களில் ஒருவர் ஆசி­ரி­யை என்றும் தெரியவந்­துள்­ளது.

காய­ம­டைந்­த­வர்கள் தியத்­த­லாவை வைத்­தி­ய­சா­லைக்கு மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக மாற்­றப்­பட்­ட­துடன் பின்னர் பதுளை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.


பள்­ளத்தில் வீழ்ந்த வேன், மறுநாள் சுமார் 7 மணித்­தி­யால போராட்­டத்தின் பின்னர் பள்­ளத்­தி­லி­ருந்து மேலே கொண்­டு­ வ­ரப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் சம்­பவம் தொடர்பில் சம­ன­ல­வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் சென்று பார்வையிட்டார்.

(படம்: என்.செல்வராஜா)

(Visited 103 times, 1 visits today)

Post Author: metro