மனைவியைக் கட்டிலுடன் கட்டிய பின்னர் நிர்வாணப்படுத்தி அந்தரங்கப் பகுதியில் தீப்பந்தத்தினால் சூடு வைத்த கணவன் புத்தல பொலிஸரால் கைது!

(எம். செல்­வ­ராஜா)

தனது மனை­வியின் அந்­த­ரங்கப் பகு­தியில் தீப்­பந்­தத்­தினால் சூடு வைத்துக் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் கண­வனை புத்­தல பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கண­வ­னுக்கும் மனை­விக்­கு­மி­டையில் ஏற்­பட்ட தக­ரா­றை­ய­டுத்து கணவன் தனது மனை­வியைக் கட்­டி­லுடன் இறுகக் கட்டி வைத்து அவரை நிர்­வா­ண­மாக்கி, தீப்­பந்­தத்­தினால், மனை­வியின் மறை­வி­டத்தில் சூடு வைத்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்ளது.

மனை­வியின் அவலக் குரலைக் கேட்ட அய­ல­வர்கள் அங்கு வந்து, கட்­டி­லுடன் கட்­டப்­பட்­டி­ருந்த பெண்ணை விடு­வித்து, அவரை மருத்­துவ மனையில் அனு­ம­தித்­தனர். அப்பெண் கடு­மை­யான தீக்­கா­யங்­க­ளுடன் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

இந்தப் பெண் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் அவ­ரது கணவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைது செய்­யப்­பட்ட நபரை, புத்­தல நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய நட­வ­டிக்கை எடுத்திருப்பதாக, புத்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் பெர்ணாந்து தெரிவித்தார்.

(Visited 339 times, 1 visits today)

Post Author: metro