பிரெக்ஸிட்டினால் பாதிக்கப்பட்ட பிஸ்கெட்

 

பிரிட்டனில் அதிகம் விரும்பப்படும் பிஸ்கெட்களில் ஒன்றின் பக்கெற் அளவை குறைப்பதற்கு மேற்படி பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்தையடுத் பிரித்தானிய நாணய மதிப்பிறக்கம் காரணமாக ஏற்பட்ட செலவு அதிகரிப்பின் பின்னணயே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

1892 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும் McVitie’s Digestives  பிஸ்கெட் பக்கெற் அளவு 500 கிராமிலிருந்து 400 கிராமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவுள்ள (பிரெக்ஸிட்) நிலையில் பிரித்தானிய நாணயமான ஸ்ரேலிங் பவுணின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வர்த்தக நாமத்தின் உரிமையாளரான பிளாடிஸ் நிறுவனத்தின் பிரித்தானிய மற்றும் அயர்லாந்துக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் நிக் பர்ணர் இது தொடர்பாக கூறுகையில், மூலப் பொருட்களுக்கான இறக்குமதி செலவு அதிகரிப்பு, நாணய மாற்று வீதம் காரணமாக எமது தயாரிப்புகளின் செலவு அதிகரித்தள்ளது. இந்த சவாலான தருணத்தில் இந்த மாற்றம் அவசியமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 34 பிஸ்கெட்டுகள் கொண்ட பக்கெற்றில் இனிமேல், 7 பிஸ்கெட்டுகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

மேற்படி நிறுவனத்தினால் சுமார் 700 பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 10 சதவீதமான பொருட்களின் பொதி அளவு சிறிதாக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக 2016 ஜூன் மாதம் பிரித்தானியர்கள் வாக்களித்தனர். 2019 மார்ச் 29 ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக பிரிட்டன் விலகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதன்பின் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுணின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது. இவ்விடயம் தமது பொருளாதார ஸ்திரநிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் உள்ளனர். (Photo: AFP)

(Visited 33 times, 1 visits today)

Post Author: metro